Tuesday, October 25, 2016

Train to Busan - மரண ரயில்


 







நான் இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு ஜோம்பி படங்கள்தான் பார்த்திருக்கேன். ஒன்னு I am legend. இன்னொன்னு Shaun of the dead.  மத்தபடி அந்த ஜோனரே எனக்கு பிடிக்காது. ஒன்னு வில் ஸ்மித்-க்காக பார்த்தேன். இன்னொன்னு Edgar Wright-க்காக. இப்போ Train to busan. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னதுக்காக பார்க்க ஆரம்பிச்சி அதோட முதல் காட்சி உள்ள சடார்னு இழுத்துப் போட்டதால  முழு படத்தையும் பார்த்தேன். ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிச்சேன்.

ஒரு பெரிய கலவரமோ, உலக அழிவோ அல்லது இந்த மாதிரி நோய் பரவி ஜோம்பி ஆகுற படங்கள்லயோ ஒரு விஷயம் பேசிக்கா இருக்கும். அது எமோஷனலா நாம அந்தப் படத்தோட எந்தளவுக்கு பான்ட்  ஆகுறோம் அப்படிங்கிறது. ஏன்னா எமோஷனலா பான்ட்  ஆகலைன்னா யார் செத்தாலும் பொழச்சாலும் அதைப் பத்தி நமக்கு கவலை இருக்காது. 2012 படத்துல கூட உலகம் அழியப்  போறது மறந்து ஹீரோவும், அவன் குடும்பமும் தப்பிச்சாங்களா அப்படின்னுதான் நாம யோசிப்போம். இந்த மாதிரியான செண்டிமெண்ட் விஷயங்களை புகுத்தி நம்மளை ஈஸியா உள்ள இழுக்குறதுதான் இந்தப் படங்களோட முழு வெற்றியும்.

நாம யார் யாருக்காக எல்லாம் ரொம்ப ஈஸியா இரக்கப்படுவோம் ? குழந்தைகள். கர்ப்பிணிப் பெண்கள். இது ரெண்டுமே இந்தப் படத்துல உண்டு. அவங்களைக் காப்பாத்தணும்னா அதுக்கு ஒரு ஸ்ட்ராங்கான ஆள் தேவை. அவங்களும் உண்டு. படம் பார்க்கும்போது நம்மளோட மொத்தப் பார்வையும் அந்த குழ்நதை அப்புறம் அந்த கர்ப்பிணிப் பெண் மேலயும் அவங்களை சார்ந்தவங்க மேல மட்டுமே இருக்குற மாதிரி அட்டகாசமா திரைக்கதை அமைச்சிருக்காங்க. கடைசியில ஏதோ நம்மள கிண்டல் பண்ற மாதிரி," இவங்களுக்காகத்தானடா இவ்ளோ நேரம் தம் பிடிச்சிட்டு உக்காந்திருந்தீங்க? போ.. அவங்க உயிரோடதான்  இருக்காங்கன்னு." இயக்குனர் நம்மள கேலி பண்ற மாதிரி உணர்ந்தேன்.நிஜமா.

எதனால அவங்கெல்லாம் ஜோம்பி ஆனாங்க அப்படிங்கிற காரணத்தை ஒரே ஒரு வசனம் மூலமா அதுவும் போன்-ல ஒருத்தன் சொல்ற வசனம் மூலமா மட்டுமே சொல்றதுக்கெல்லாம் ஒரு கெத்து வேணும். ஆனா அடஙக ஒரே ஒரு வசனத்தால மட்டுமே முக்கியமான ஒரு கதாபாத்திரம் சாகும்போது நமக்கு அதுவும் சேர்ந்து ஞாபகம் வர்ற மாதிரி செஞ்சதுதான் மேஜிக். excellent screenplay.

முதல்ல இருந்தே நாம வெறுக்குற ஒரு கதாபாத்திரத்தை கடைசி ஒரு வரி வசனத்துல ,"அடச்சே.. இதுக்குதான் இவன் இவ்ளோ துடிச்சிக்கிட்டு இருந்தானா.. பாவம்..'-ன்னு சொல்ற மாதிரி வச்சாங்க பாருங்க. இயக்குனர் நிறைய  எம்ஜிஆர் படம் பார்த்து வளர்ந்தவர் போல. 

ஒரு ஆக்க்ஷன்  படத்துக்கான பில்டப் எப்படி இருக்கணும்ங்கிறதுக்கு இந்தப்படம் இன்னொரு உதாரணம். ட்ரெயின்  குகைக்குள்ளே எப்போ போகும்னு நம்மள ஒரு கட்டத்துல யோசிக்க வச்சதுலயே அது தெளிவா தெரிஞ்சிரும். அதேமாதிரி ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியா விளக்கப்படாம கதை போற போக்குல நம்மளே இவன் இனிமே இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவான்னு சரியா யோசிக்க வச்சது இன்னொரு செம்ம மேட்டர். நிறைய கத்துக்கலாம்.

கொஞ்சம் ரத்தம் மட்டும் அதிகம். அதைத் தவிர்த்துட்டு பார்த்தா இந்தப் படத்தை  எந்த சிச்சுவேஷன்லயும் யார் வேணும்னாலும் பார்க்கலாம். சக மனுஷன் மேல அன்பு வைக்கிறது, உதவுறது, தகவல் பரிமாற்றம், ஒரு கிரிட்டிக்கல்  சிச்சுவேஷன்-ல மனுஷன் எப்படியெல்லாம் மாறுவான் அப்படிங்கிற பல விஷயங்களை ஒரு ஜோம்பி படத்துல சொல்லியிருக்காங்க.

பாருங்க.

Monday, October 12, 2015

டிடக்டிவ் பாலகணேசன் - அத்தியாயம் 2

எழுதியவர் : கிஷோகர் டைனமோ

"ஏம்மா.. கொண்டையன் உன்னைய அடிச்சான்"? கேட்டது கருவண்டு. பதில் சொன்னது கதரீனா கயுஃப் .
கழுத அவ பேரு சுலுக்காணி தான். நம்ம டிடக்டிவ் பால கணேசன் தான் அவளுக்கு கதரீனா கயுஃப்னு பேரு வச்சது. ஒரு நாள் லீவுல ஊருக்க வந்தப்போ இந்த பொண்ணு தொலாவ புடிச்சி தண்ணி எறைக்கிறத பாத்தாரு, அதுக்கு மொதோ ராத்திரி தான் அந்த ஹிந்தி புள்ள கதரீனாவோட "மை நேம் இஸ் ஷீலா" பாட்ட பாத்திருந்தாரு. ஊர்ல செவப்பா இருந்தது அவ மட்டும்தாம்லா. அவ ஒரு செமக்கட்டன்னு நான் சொல்லலாமா? அட அவள அப்புடி சொல்லலாம்யா. அது போக கணேசன் சும்மாவே ஜொள்ளுப்பேர்வழி, ஊர்ல கத்ரீனா மேல காதலாகி கனிஞ்சு உருகிற ஆளுகள்ள கணேசனும் ஒருத்தரு. சும்மா சொல்லக்கூடாதுய்யா டிட்டர்ஜன்ட் கணேசன் மேல அந்த புள்ளைக்கும் ஒரு இது இருக்கத்தான் செய்யுது, அது அந்தப்புள்ள புருசன் மாரிமுத்துக்கு தெரியுமா தெரியாது.
"ஏம்மா , ஒன்னயந்தாம்மா.. கொண்டையன் அடிச்சானா? " இப்பவும் கருவண்டு தான். கணேசன் கதரீனாவையே வச்ச கண்ணு வாங்காம பாத்துக்கிட்டு நிக்கான்.
ஆமாங்கிற போல தலைய மட்டும் லேசா ஆட்டிக்கிடுதா கதரீனா.
"ஏ.. எவிடன்ஸ் வேணும்லா..." கணேசன் குறுக்கே பாய்ந்தான்.
"கொண்டையன் தானப்பா... பொளேர்ன்னு போட்டிருக்கானே" கூட்டத்துல துண்டு பீடில இனிமே இழுக்க மிச்சம் இல்லாத நேரம் , வாய் சுடுபட்ட பெருசு ஒண்ணு வசனம் பேசுது.
"எவெடென்ஸ் வேணும்லா..." திரும்ப கணேசன்.
" என்னப்பா நீயி....? அந்த மாரில்லாம் இங்க பண்ணிர முடியுமா?" கருவண்டுக்கு மட்டும் தான், கணேசனின் எவிடென்ஸ் ஆர்வம் புரிந்தது. ஏன்னா.. முன்னையும் ஒரு தடவ அந்த பேக்டரியோட‌ தெருமுக்குல கொண்டையன் அடிச்சிட்டான்னு யோகா தியாகு மல்லாக்க விழுந்து கிடந்தப்போ , அடிபட்டதுக்கு ஆதாரம் வேணும்னு சட்டைய கழட்டி முதுகு மேனில்லாம் பக்கம் பக்கமா மனப்பாடம் பண்னினவன் கணேசன். கணேசன் தன்னோட டிடக்டிவ் வேலைய படிச்சதே அந்த முதுகுல தானே.....
"என்னப்பா கணேசா... இந்த சில்லறப்பய தான் கேள்வியா கேட்டுக்கிட்டுக்கிடக்கான்... இவன விட வித்த தெரிஞ்சவன் நீ தானப்பா.... சும்மா அந்த சீரெட்ட புடிச்சிக்கிட்டே இருக்கியே" பரபரப்பா சைக்கிள்ள வந்து சம்மன் குடுத்த பெருசு தம்பங்குக்கும் வசனம் பேசுது.
இந்தா.. இந்தா... கட்டானுகன்னு காட்டிட்டானுக இல்ல. ஒரு பெரிய டிடக்டிவ் சீரெட்டு புடிச்சுக்கிட்டு ரோசன பண்றப்போ சில்ற கேள்வில்லாம் அவன் அஸிஸ்டென்டு தான் கேப்பாங்கிற அடிப்பட ஞானமே இல்லாத பயலுவளா இருக்கானுகளே.
"அட இருங்கப்பா... என்ன ஏதுன்னு அந்த பொண்ணே வெலாவாரியா சொல்லணுமால்லியா..... அதான் கருவண்டு கேக்கிறாப்லல்ல ? பின்ன எதுக்கு குதிக்கீரு?" இன்னும் ஒரு ப்ஃப் இழுக்கலாம்னு தெரிஞ்சும் கூட அந்த சிகரெட்ட காலுக்கு கீழ போட்டு மிதிச்சுக்கிட்டே கதரீனா கிட்ட வந்தான் கணேசன். அடியொட்ட சிகரெட்ட இழுத்து குடிக்கிறது டிடக்டிவ் லட்சணம் இல்லங்கிறது கணேசனோட அபிப்பிராயம்.
"ஏம்மா இம்புட்டு பேரு கேக்குறங்கல்லா.... உண்டு இல்ல சொல்லிட்டா மிச்ச சோலிய பாக்க தோதா இருக்குமே" கணேசன் இந்த மாதிரி காரியமா கேக்குறப்போ கூட அவன் கண்ணுல காதல் தெரிஞ்சிச்சி. நல்ல வேள பக்கத்துல நின்ன மாரிமுத்துக்கு தெரியல. படுபாவிப்பய அவன்.... ஒரு நா அவன் வீட்டு கொல்லப்புறத்துல ஒருத்தன் ராத்திரி குதிச்சான்னு , காட்டுத்தேக்கு மரத்துல கட்டி வச்சு அவன் குஞ்ச அறுத்துப்போட்டவன். நெசம் தேன்னு ஊருல பாதிப்பேரு சொல்லுறாக, ஆனா மாரிமுத்து காத மட்டும் தான் வெட்டினதாகவும் கேள்வி இருக்கு. குஞ்சோ, காதோ ? எதுவானா என்னையா ? அவன் வெட்டுவான் அது நெசம் தானே?
"ஆமாங்க அடிச்சாரு.." கதரீனா வாய் தொறந்துட்டாய்யா. அவ ஒதடு இருக்கே.. வேணாம் , இங்க அநாவசியம். தேவப்பட்டா பின்னால பாத்துக்கிரலாம்.
"இங்க தான்யா பிரச்சனையே இருக்கு..." கருவண்டு சொல்றான்.
"என்னடா?"இது கணேசன்.
"இல்ல குருவே , இத்தின நாளா பாருங்க கொண்டையன் அடிச்ச ஆளுக பூராமே ஆம்புளைக தான். யோகா தியாகு , மாதவன் , கேப்பியார் , சிவகொமாரு எல்லாருமே. இன்னொரு ஒத்தும என்னான்னா பூரா குடிகார பயலுக, ஊருக்கு உதவாத தறுதலைங்க. எப்போ பாரு மர்மமாவே திரிஞ்சிட்டிருக்க பயலுவ..."
அதென்னா உண்ம தான். மேல கருவண்டு சொன்ன பூரா பயலுகளும் கொண்டயன் கிட்ட அடிபட்டப்போ ஊருக்குதவாத சோக்களிகள கொண்டயன் தண்டிகிறான்னு ஊரே பேசிக்கிடிச்சு. ஒரு வெள்ளொக்கெழம கொண்டயன் கோவில்ல சாமி வந்து ஆடுன பூசாரியும் அத தானேய்யா சொன்னாரு. அன்னிக்கு கூட காணிக்கையா ஊரே சேந்து சாமி ஆசையா கேட்ட எச்டிசி ஃபோன் காணிக்கையா குடுத்துச்சே.
இங்க இந்த பூசாரி பத்தி சொல்லணுமே, மொரட்டு தேகம் , கடா மீசன்னு ஒரு பூசாரிக்கு உண்டான எல்லாம் வெளஞ்சு கிடக்குற ஆளு. கொஞ்ச நாளுக்கு முன்னாடி தான் இமய மலலருந்து வந்திருக்காரு. நடந்தது பத்தில்லாம் சொல்லுவாரு , அவரு சொன்னா சொன்னபோல நடக்கும். இந்த மாரி ஊரு நம்புது.
"ஆமாடா.... மொதோ தடவையா கொண்டையன் ஒரு பொண்ணுக்கு அடிச்சிருக்கானே...." கணேசன் ரெண்டு விரலால வாய மூடி புருத்வ‌த தூக்கிகிடுத்தான்.
"ஏம்மா.. எங்கின வச்சு கொண்டைய உன்னைய அடிச்சான்?"
"முதுகுல ஓங்கி அறங்சாருங்க, நெஞ்சே வெடிச்சிரும் போல இருந்திச்சு"
கணேசன் ஆர்வமாகி சிரிக்கிறத கருவண்டு கண்டுகிட்டான்.
"ஏம்மா... எங்கினன்னா எந்த எடத்துல வச்சு அடிச்சான்னு கேட்டாரு..."
எதுக்குடா கொழப்புறங்கிறமாதிரியே ஒரு பார்வ பாக்குறான் கணேசன். இப்போ கதரீனா பேசுது.
" அதான் அந்த ஃபேக்ட்ரி முக்குல வச்சி தான்"
சொல்லி முடிச்சதுதான்யா தாமதம் , "அங்கெல்லாம் நீ ஏன்டி போறன்னு" செவுட்டுலையே வச்சான் பாருங்க மாரிமுத்து ஒரு அற. அந்த அடிக்கு கொண்டையனே பரவால்லன்னு போயிருக்கும் கதரினாவுக்கு. அடிச்சவன் மேக்கொண்டு கணேசன் விசாரிக்க கதரீனாவ விடாம இழுத்துக்கிட்டே போய்ட்டான்.
"ஏம்பா.. ஊர்ல உள்ளவன் எல்லாம் அவளுக்கு அடிக்கான், கொண்டையன் அடிக்கப்பிடாதாப்பா" சொன்ன பெருசு கௌதம ஆதித்தன். மகா கேடி பேர்வழி. அந்த சாவுற வயசுலையும் காதல் கவிதைன்னு பச்ச பச்சையா ஊர் சொவத்துல ஏதுனாச்சும் எழுதி வச்சிருக்கும். டபுள் மீனிங்க் இல்ல, ட்ர்பிள் மீனிங்ல்லாம் பேசும். அதான் அந்த கெழம் சொன்ன மாத்திரமே கூடியிருந்த பூரா சனமும் "களுக்"ன்னு சிரிச்சிரிச்சு.
அன்னிக்கு ராவு....
கணேசன் , கருவண்டு ரோட்டோர கவுண்டரு மூணுபேரும் அந்த ஃபேக்டரிக்கு போற பிரதான முக்குல , செத்து சாஞ்சி கெடக்கிற ஒரு மரத்துல உக்காந்து இருக்காங்க. அந்த தெருமுக்க கண்காணிச்சு துப்பு துலக்கணும்ங்கிறது கணேசனோட ரோசன. கருவண்டு துண்டு பீடி பத்தவச்சிக்கிடுத்தான், கவுண்டரு அவன் ரெண்டு இழுப்பு இழுத்ததும் வரப்போற தன்னோட மொறைக்காக அவன் வாயையே பாத்துக்கிட்டு இருக்காரு. கணேசன் மட்டும் ஃபில்டர் வச்ச சீரெட்டு புடிச்சுக்கிட்டு இருக்கான். சீனியர் டிடக்டிவ்லா?
ரெண்டு இழுப்பு இழுத்து பொகைய ஊதி வெளிய விட்டு ஒரு கவளம் எச்சிய புளீச்சின்னு கொஞ்சம் தள்ளி துப்பிக்கொண்டே கணேசன் சொல்றான் " நம்ம கதரீனாவ பாக்குறப்போல்லாம் எனக்கு புல்லுக்கட்டு சீதா ஜோக்கு தான் ஞாபகம் வருதப்பா...." " ஒரு நா அவ கிட்டையே அந்த ஜோக்க சொல்லணும்.."
கருவண்டுக்கு அந்த ஜோக்கு நல்லாவே தெரியும், அதனால கன்னா பின்னான்னு சிரிச்சுக்கிட்டான் . ஆனாலும் "அது ஒண்ணும் அவ கிட்டசொல்ல வேணாம்"ன்னு கொஞ்சம் அழுத்தமா சொல்லிக்கிட்டான். கவுண்டருக்கு எதுவும் புரியல "என்னப்பா அது புல்லுக்கட்டு சீதா கதை"ன்னு ஆர்வமானாரு.
கணேசன் ஏழாவது பஃப் இழுத்துக்கிட்டு இருக்கிற நேரம் அந்த ஃபேக்டரில இருந்து ரெண்டு உருவம் கெளம்பி வெளிய போகுதுங்க. ஒண்ணு நேரா கணேசன் ஆளுக இருந்த இடம் வரைக்கும் வந்து , அந்த தெருமுக்குல திரும்பி அடுத்த பக்கமா சிட்டா மறையுது.
ரெண்டாவது உருவம் சொடல ரோடு பக்கமா ஒத்தயடி பாதைய புடிச்சு நடந்து , எருக்கல காடு தாண்டி , செவனாண்டியோட ஆட்டு பட்டிக்குள்ளாற பதுங்கி வந்து , அந்த எல்லப்பக்கமா இருந்த ஒரு வீட்டு சொவத்துக்குள்ள குதிக்குது . கோழிக்கூட்டுக்கு கணேசனோட அம்மா போட்டு வச்ச குண்டு பல்பு வெளிச்சம் மங்கலா அந்த உருவத்து மேல விழுது.... கண்ண கொஞ்சம் இடுக்கி பாத்தா , ஆத்தி நம்ம பூசாரி..........

Sunday, October 11, 2015

டிடக்டிவ் பாலகணேசன் - அத்தியாயம் 1

எழுதியவர் : சிவகுமார் கனகராஜ்

மொத அநியாயம் - அதாவது அத்தியாயம் :
சாதா கணேசன் டிடர்ஜண்ட் கணேசனாக எவ்வாறு மாறினான்? ஊர்ப்பக்கம் டிடக்டிவ் வாயில் நுழையாமல் இவ்வாறே அழைக்கிறார்கள். அவனின் கணக்குப்படி இதுவே பாதி வெற்றிதான். இவ்வீர வரலாற்றைப் புரிந்து கொள்ள குறைந்த பட்சம் மூன்று தலைமுறையேனும் பின்னோக்கிச் செல்ல வேண்டும் நீங்கள்.. ஆனால் கதை மொத்தமே பணிரெண்டோ பதிமூன்றோ அத்தியாயங்கள் தாம். அதிலும் எவ்வாறேகினும் ஐந்தாவது அத்தியாயம் வாக்கில் கதை திசை மாறும். பின் நொண்டும், தவழும் கடைசியில் படுத்தே விடும். ஆக மூன்று தலை முறை வேண்டாம். ஒரே தலை முறையோடு நிறுத்திக் கொள்வோம்.
பி.பி - பஞ்சாயத்து பழனிச்சாமி: கணேசனின் தந்தையார்.
------------------------------X----------------------------------------X--------------------------
தினமுரசு நாளேட்டுச் செய்தி:
வெறியம்பட்டி. கரூர் தாலுகா. திருச்சி மாவட்டம்.
நேற்று வெறியம்பட்டி அருகே நடந்த ஜல்லிக்கட்டில் ஒருவர் பலி. இருவர் படுகாயம். பலியான நபர் ஆட்டையம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி ஆவார். (புகைப்படத்தில் மலர் மாலையுடன் சோகம் ததும்ப அவர் புன்னகைக்கும் காட்சி. கல்யாண ஆல்பத்தில் எடுக்கப்பட்டது.) மாட்டை அடக்கும் போது மாடு முட்டியதில் குடல் சரிந்து பரிதாபமாக இறந்தார்.
-----------------------------------------X--------------------------------------------X-----------
ஆட்டையம்பட்டியின் அறுபதாண்டு கால சரித்திரத்தில் ஊர்ப்பெயர் நாளேடுகளில் வந்த தினமது. நாளேடு அறியாத ஒரு உண்மை. அவர் சென்றது மாட்டை அடக்க அல்ல. ஒரு பஞ்சாயத்தின் பொருட்டு. தேமேயென்று செல்லாமல் கூட்டத்தைப் பிளந்து சென்று உள்நோக்கியவருக்கு திபுரு திபுரென்று வரும் காளை சற்று வியப்பை அளித்திருக்கக் கூடும். வியப்பு பயமாக மாறியிருந்த போது அவரும் காளையும் கட்டுப்பாட்டை இழந்திருந்தார்கள்.
அவிழ்ந்த வேட்டி குறித்துக் கவலைப்படவெல்லாம் நேரமின்றி நாலெட்டு போட்டிருப்பார். அந்தோ பரிதாபம் காளை தன் இலக்கை எட்டியிருந்தது. தன் வாழ்நாளில் தங்கம்மாவைத் தவிர வேறு யாரையும் தொட்டிருக்காத வேறு யாரிடமும் வசவு வாங்கியிருக்காத வேறு யாரிடமும் மாத்து வாங்கியிருக்காத பி.பி. என்கிற பஞ்சாயத்து பழனிச்சாமி நொடிப்பொழுதில் இறைவனடி சேர்ந்தார். அப்பொழுது கணேசன் சிறுவன். ஏதோ பச்சை மண் என்பார்களே, அது போல் இல்லாமல் மஞ்ச நஞ்சாக இருந்தான். நல்ல திருட்டு புத்தி. விபத்தை வீரச் சாவாக்கியதில் மிளிர்ந்தது அவன் மூளை.
ஒன்றா இரண்டா, எத்துணை பஞ்சாயத்துகள். எத்துணை களம். ஆயிற்று. அண்ணார் மறைந்திருக்கலாம், அவர் முடித்து வைத்த பஞ்சாயத்துக்கள் எச்சமாக அங்கொன்றும் இங்கொன்றுமாய் இன்றும் காணக் கிடைக்கும். அதோ, அந்த முக்கு வீட்டுக் கிழவி தக்கி முக்கியேனும் வாழ்கிறாளே, அதன் காரணம் பி.பி . கிழவியும் புருசனும் பெரு வாழ்வு வாழ்ந்தவர்கள் தான். வசதியாக. அவர்கள் மகன் மூவரிடம் தொழில் செய்ய கடன் வாங்கியிருந்தான். தொழில் உறங்கி வட்டி விழித்துக் கொண்டது. போதாத காலம் தான்.
உனக்கெவ்வளவுப்பா? இது பி.பி.
பத்தாயிரத்தி சொச்சம்ங்க.. வட்டியச் சேத்துனா..
அதெல்லாம் வேணாம் நிறுத்து. இந்தா பாரு மாமா, வயக்காட்ட அவம் பேர்ல எழுதி வச்சிரு.
ஏழு மணிக்கு மேல் பி.பியை அணை போட்டாலும் தடுக்க இயலாது. அது அவர் பசி நேரம். ஞாயம் என்பது சோ.மு சோ.பி படி மாற வல்லது. அதாவது சோத்துக்கு முன் மற்றும் சோத்துக்குப் பின்.
எனக்கு பதினாலாயிரம்க,
மாமா வீட்ட அவனுக்கு மாத்தி வுட்று. வட்டிக்குப் பத்து மாட்டையும் பத்தி வுட்று.
இதைக்கேட்ட மாத்திரத்தில் நெஞ்சைப் பிடித்து விழுந்த கெழம் பரலோகம் போய்ச் சேர்ந்தது. அப்பொழுது அவர் பி.பி.யைப் பார்த்த பார்வை இருக்கிறதே. இந்த தீர்க்கம் தீர்க்கம் என்பார்களே, உன்னைக் கொல்லாம விடமாட்டேன் எனும் கொலை வெறி தீர்க்கம். அது அவர் கண்களில் தென்பட்டது.
இதோ பி.பி.யின் வார்தைகளில் அச்சம்பவம். - மனுசன், ஒத்தச் சொல்லு கடன்னு கேட்ட உடனே தர்மத்துக்கு கட்டுப்பட்டு உசுர உட்டாண்டா. டேய், பி.பி என்ன கடங்காரனாச் சாவ உட்ராதடானு என் நெஞ்சுச் சட்டைய கொத்தாப் புடிச்சு உலுக்குன மாறி ஒரு பார்வை. உங்கொப்பன் கடனக் கட்டிப் போட்றா சின்ராசு என்று கூறி ஒட்டுமொத்த சொத்தையும் கை மாற்றி விட்டார். கிழவி இப்பொழுது தெருவில்.. இது போல் எத்துணை. ஹூம், வருமா அவர் போல்.
----------------------X---------------------------------X---------------------------------X------
தந்தையின் பஞ்சாயத்து திறமை கணேசனுக்கு ஆராய்தலில் வந்து சேர்ந்தது ஆச்சர்யமில்லை. லாஜிக் இடிக்கிறதோ? இடிக்கட்டுமே. என்ன குடியா முழுகப் போகிறது? டிடக்டிவ் என்று தலைப்பு வைத்தாகி விட்டது. கதை வேறு இல்லை. வேறென்னதான் செய்வதாம்?
கணேசன் சுஜாதவைப் படிக்க ஆரம்பித்திருந்தான். பால கணேசன் பால் கணேஷ் ஆகிவிட்டான். அதில் வரும் கணேசைப் போல் தன்னை எண்ண ஆரம்பித்தான். வசந்துக்கு எங்கே போவது? இருக்கிறான் ஒருவன். கருவண்டு. ஆஹா, ஆட்டத்தை ஆரம்பிக்க வேண்டியது தான்.
ஒரு சிறு முன்கதை : நாம் பஞ்சாயத்து பழனிச்சாமியைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், ஒரே பாராவில் கணேசன் பள்ளியை முடித்து பி.ஏ சேர்ந்து வெற்றிகரமாக மூன்று வருடம் கழித்தும் விட்டார் கல்லூரியில். பட்டம், அது யாருக்கு வேண்டும்?
கல்லூரியில் இருந்து அவர் வெற்றிகரமாக டின் டிடி டின் டிடி டின் டிடி வீணை இசை மனதில் நிறைந்திருக்க காற்றில் பெல்பாட்டம் படபடக்க கருவண்டு கணேஷின் பையை சுமந்து வர, சக்கரம் வைத்த தனது பொட்டியை ஸ்டைலாக உருட்டிக்கொண்டே ஊருக்குள் நடந்து வரும் அழகைக் காண கண் கோடியெல்லாம் தேவயில்லை. ஒன்றரைக் கண் இருந்தாலே போதுமானது. எங்கேயோ ரேடியோவில் ஒரு நாயகன் உதையமாகிறான் பாட்டு கரைந்து இரைந்து அவர் நடைக்கு மேலும் மெருகூட்டியது.
தங்கம்மா வீட்டில் போட்ட கூச்சலுக்கு அளவே இல்லை. ஊருக்குள் முதல் முறை பேண்ட் அணிந்து வந்தது ஒரு காரணமாய் இருக்கலாம்,
ஊக்கேலி நாயே. மொதல்ல அந்தக் கருமத்த மாத்தித் தொலடா, உங்கப்பன மாறியே பவுசா இருந்தர்லாம்னு பாக்கறியா? மொதல்ல இந்த தவுட்டப் போய் எருமத் தொட்டில கரைச்சுட்டு வாடா எரும என்று வாழ்த்தி அனுப்பினாள். பாவம், பெரும்போக்குப் பேர்வழிகள் அழிந்து விடுவார்கள் என்பது அவள் எண்ணம்.
ஏண்டா கருவண்டு, ஒரு டிடக்டிவ் எருமச் சாணி அள்ளலாமாடா?
அண்ணே, நாளப் பின்ன எரும தொலஞ்ச கேசெல்லாம் வந்தா எறங்கி வேல பாக்கனும்னே, எல்லாம் ஒரு அனுபவந்தான். சாணிச் சட்டியை அலுங்காமல் கணேஷிடம் நகர்த்தி வைத்தான் கருவண்டு.
ஆள் வளர்ந்த அளவிற்கு மூளை வளராத ஆள் கணேஷ் என்றால், மூளை வளர்ந்த அளவிற்கு ஆள் வளர்ச்சியில்லாதவன் கருவண்டு. மூணே முக்கால் அடி வாக்கில் இருப்பான்.
அப்பிடிங்கற, என்று செயலில் இறங்கும் போது அவசரமாக வந்து இறங்கினார் ரோட்டோரக் கவுண்டர். முகத்தில் பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.
கணேசா, கொண்டையன் வேலையக் காமிச்சிட்டாண்டா மறுபடியும். படிச்ச பய நீயி, என்னான்னு வந்து பாருயா என்று கூறிக்கொண்டே சைக்கிளை எடுத்துக் கொண்டு விரைந்தார்.
கொண்டையன் அந்த ஊரின் துடியான சாமி. இரவு நேரத்தில் ஏதோ போலீஸ் கணக்காக அவர் ரவுண்ட்ஸ் வருவார் என்றும் குறுக்கே யாரும் வரும் பட்சத்தில் அவர்களை பொளேரென்று ஒரு அறை விடுவாரென்றும் நம்பவே தகாத பூசாரி பொன்னையன் கூறித் திரிகிறான். ஒன்று போல் அடி வாங்கிய எல்லோரும், இருட்டு, ஒரு உருவம், ஓங்கி அடிச்சது என்று எழுதி வைத்ததையே ஒப்பிக்கிறார்கள். குறிப்பாக அந்த ஆளரவமற்ற தோல் பதனிடும் கட்டிடத்தின் அருகிலியே இம்மாதிரியான தொடர் நிகழ்வுகள் அரங்கேறுகின்றன.
காமராசர் காலத்தில் நேருவால் ஆர்ப்பாட்டமாக அவ்வூரில் தொடங்கப்பட்ட தொழிற்சாலை. இப்பொழுது மர்ம இடமாக உருமாறி விட்டது. அந்திக்குப் பின் அங்கு யாரும் செல்வதில்லை.
லுங்கியை தொடைக்கு மேல் ஏத்திக்கட்டிக் கொண்டே, “கணேசன், கணேஷா மார்ற நேரம் வந்துருச்சுடா” என்ற பன்ச்சிற்கு அருகிலிருந்த எருமை தன் நாவால் கணேசனின் தொடையை நக்கி ஆமோதித்து வரவேற்றது.
தெறிக்க விடுவோம் இனி...

Wednesday, October 7, 2015

நரகம் 2 கி மீ - பன்னிரெண்டாம்/இறுதி அத்தியாயம்

எழுதியவர் : மு பாலகுருநாதன்

சிக்கலான கேஸ் என்பது தெரியும். ஆனால் இத்தனை அபாயகரமான முடிவை நெருங்கும் அளவில் இருக்கும் என்பதை பாலகணேசன் எதிர்பார்த்திருக்கவில்லை. அதே நேரத்தில் தனியென ஒரு கிரகம். இதெல்லாம் பாலகணேசனுக்கு மலைப்பைக் கொடுத்தது! இதே நேரத்தில் கிஷோகர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப ஆக்ஸிஜன் சிலிண்டர்களை நையிரா க்ரூக்ஸ் ற்கு கொண்டு வந்திருந்தாள்! தனியாக இரண்டுமுறை வந்த ஸ்பேஸ் ஜெட்களை மயங்கி இருந்த குறுந்தாடியும் கவனிக்கவில்லை. ஏற்கனவே இறந்துபோன அவர் அஸிஸ்டெண்ட்டும் கவனிக்கவில்லை! ஆண்டோ விற்கு தனியாக மெஸேஜ் வர அதிர்ந்தேவிட்டான். வேற்றுகிரக வாசிகள் வரும் நேரத்தில் இப்படி ஒரு தடையா? இதுவரை குரூரம் கக்கிய அவன் கண்களில் பயம் கவ்வியிருந்தது.
...........
அந்தப் பெண்களை மானிட்டர் செய்வது தான் தன் முதற்பெரும் வேலை. அவர்களையும் காணவில்லை. அனேகமாக எல்லோரும் இந்த கட்டிடத்தில் தான் ஒளிந்திருக்க வேண்டும். தனி கிரகம் ஆட்கள் அதிகம் வேண்டாம் என்று நினைத்திருந்த ஆண்டோ தன் சீனியருக்கு 'ஆபத்து. பெண்கள் மானிட்டர் கேமராக்களில் இருந்து தப்பிவிட்டனர். அவர்கள் ப்ளாக் ஹோல் அடைவதற்குள் நாம் பிடித்தாக வேண்டும். ஆட்கள் தேவை" என தகவல் கொடுத்தான். அந்தத் தகவல் சீனியரை அடைய சேட்டிலைட் தகவல் பரிமாற்றம் வழியாக செல்லும் சில நொடிகளுக்குள் பாலகணேசன் கிஷோகர் நையிரா கட்டிடத்தை அடைந்திருந்தனர். 
.........
"மாலினி.. அங்கே பார்!" மறைந்திருந்து பார்த்தவாறே பாலகணேசன் வருவதை காட்டினாள் அனுஷா. "இவர்கள் நம்மைத்தேடி தான் வருகிறார்கள். கண்ணில் பட்டோம். தொலைந்தோம். இவர்களை எப்படியாவது தாக்கி நாம் ப்ளாக் ஹோல் இருக்கும் இடத்தை மிரட்டிக் கேட்டுவிட வேண்டும்" என்றாள் அனுஷா.
சந்தியா உட்பட அனைவரும் ஆமோதித்தனர். அவர்கள் கட்டிடத்தை நெருங்க ஆரப்பித்ததும் சந்தியா கீழ் இருந்த ஒரு கூர்ந்த மரக்கிளையை எடுத்து கிஷோகரைப் பிடித்துக் கழுத்தில் வைத்து அழுத்தினாள். மாலினி மற்றவர்கள் நையிராவையும், பாலகணேசனையும் பிடித்துக்கொண்டனர். 
.........
நையிரா பெண்களிடம் எல்லாம் விலாவரியாக தெளிவுபடுத்தினாள். அவள் கிஷோகர் இருவரும் அந்த பெண்களை அழைத்துக்கொண்டு ஒரு நையிரா வந்த கலம் மூலமாக பூமி செல்ல பாலகணேசன் உத்தரவிட்டார். ஆண்டோவை தான் சமாளித்துக் கொள்வதாக சொன்னார். கிஷோகருக்கு ஒரே ஆச்சர்யம்! வேறு ஏதும் கேள்வி கேட்காமல் எல்லோரையும் காப்பாற்றிய திருப்தியில் பறந்தான்.
..........
வேற்று கிரக வாசிகளின் விண்கலம் இந்த பெண்களின் நிலை பற்றியும், ஜி1 ரத்த ஓட்டத்தின் நிலையினால் ஏதேனும் எதிர்வினை அவர்கள் உடலில் நேர்கிறதா என்பதை நேரடியாக ஆராயவும் இந்த க்ரூக்ஸ் கிரகத்திற்கு பார்வையிட வந்திருந்தனர். அவர்களுக்கு மற்றும் சில சிறிய விண்கலங்கள் இருந்தது அதிர்ச்சியைக் கொடுத்தது. அங்கிருந்தே ஆண்டோவிற்கு சேட்டிலைட் போன் செய்தார் ஆராய்ச்சியின் ஹெட் சபர்ஸ்! "எல்லாம் போச்சு ஹெட்.. பொண்ணுங்க தப்பிச்சுட்டாங்க! அவங்களுக்கு ப்ளாக் ஹோல் எங்க இருக்குனு தெரிஞ்சு போச்சு. பக்கத்துல இருக்குற விண்கலங்கள் போலீஸுனுடையது. தப்பி விடுங்கள்!" என்றான் ஆண்டோ!
"என்ன விளையாடுகிறாயா? மில்லியன் கோடி விஷயம் இதெல்லாம். கிட்டத்தட்ட 100 வருஷ உழைப்பு இந்த க்ரூக்ஸ் கிரகம்! நீ இல்லைனா இந்த வேலையைத் தொடர இன்னொரு ஆண்டோ வருவான். ஆனா இந்த நிமிஷம் உன் மூளை சிதறடிக்க என்னால முடியும். பார்க்குறியா?" என சபர்ஸ் முடிப்பதற்கு மூன்று மைக்ரோ செக்கண்டுகள் முன்பு பாலகணேசனின் துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு ஆண்டோவின் மூளையின் ஒரு டீஸ் ஸ்பூன் அளவில் உருவிக்கொண்டு மற்ற பக்கம் வழியாக வெளிவந்தது!
ஆபத்தை உணர்ந்த சபர்ஸ் மற்றும் குழு க்ரூக்ஸ் கிரகத்தை இன்விஸிபிள் மோடுக்கு மாற்றும் ஆயத்தங்கள் ஆக வேண்டும் என தன் மேலிடத்திற்கு தகவல் கொடுத்துவிட்டுப் பறந்தார்.
..........
ஆண்டோவைத் தூக்கிக் கொண்டு பாலகணேசன் தான் கிஷோகருடன் வந்த இன்னொரு கலத்துக்கு வந்தான். ஆக்ஸிஜன் சிலிண்டர் பொருத்தியிருக்கும் பொழுது கூட பாலகணேசனுக்கு மூச்சு முட்டத் தொடங்கியிருந்தது. க்ரூக்ஸ் ஸின் சீதோஷண நிலை திடீரென மாறி குளிர் உறையத்தொடங்கி இருந்தது. அந்த செயற்கை மரங்கள் தங்கள் வேர்களை விட்டு சரியத் தொடங்கின. சபர்ஸ் ஸின் தகவல் மேலிடத்திற்கு சென்றிருக்க வேண்டும் என உறுதிப் படுத்திக்கொண்டு தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என கலத்தில் ஏறி ப்ளாக் ஹோல் வழியாக பறந்தார். அவர் சரியாக ப்ளாக் ஹோலை விட்டு வெளியே வர வர அந்த கிரகம் அப்படியே மறையத் தொடங்கியது. சுற்றி ஒரு லேயர் போன்று படர ஆரம்பித்தது. அத்தனை ஆச்சர்யம் காட்டிய புது உலகம் தன் கண் முன்னாலேயே அஸ்தமனம் ஆகிக் கொண்டிருந்ததை பாலகணேசன் சற்று வருத்ததுடனே பார்த்துக்கொண்டு இருந்தார்.
....................
அவர் அங்கு இருந்து கிளம்பும் பொழுது கம்ப்யூட்டரின் அத்தனை டேட்டாக்களை எடுத்துக்கொண்டதும், அந்த ஏலியன்ஸ் ஹெட் சபர்ஸ் சை ஏன் தப்ப விட்டார் என்பதையும் பாலகணேசன் மட்டுமே அறிந்திருந்தார்.
................
பூமி வந்ததும் கிஷோகரையும் அழைத்துக்கொண்டு சீனியரை கைது செய்தனர். "இன்னிக்கு தேதிக்கு கேம் எல்லாம் அவுட் ஆப் டேட். சாதரணமா கேண்டி கிரஸ், ப்ரின்ஸ் ஆப் பெர்சியா, கேங் ஆப் வார்னு கேம்ல இருக்குற சுவாரஸ்யம் எல்லாம் காணாம போயிடுச்சு. ரெண்டு லெவலுக்கு மேல யாருமே போறது இல்ல. அதுனால தான் மனிதர்கள் உயிரோட விளையாடுற விளையாட்டு அன்னிய நாடுகளில் இப்ப பேமஸ். இதுபோன்ற கேம்கள் இன்னும் இந்தியாவில் வெகு சீக்கிரம் பரவுறது நான் இல்ல. யாராலயும் தடுக்க முடியாது! இது மூலமா 5000 கோடி சம்பாதிச்சேன். அண்டோவ துணைக்கு வச்சுக்கிட்டேன். "...
சீனியரின் வாக்குமூலங்கள் பத்திரிக்கைகளை உலுக்கின. மக்கள் இப்படி ஒரு நிகழ்வு நடந்தேறியதை கிலியுடன் பேசிக்கொண்டனர். அந்தப் பெண்களை அவர்களின் கார்டியன்களிடம் ஒப்படைக்காமல் தனியார் காப்பகத்தில் சேர்த்தார் கிஷோகர். ஆண்டோ அடைத்து வைத்திருந்த வித்யாவையும் கிஷோகர் கண்டறிந்து விடுவித்து அந்த காப்பகத்தில் சேர்த்தார். அந்தப் பெண்களுக்கு எல்லாம் ஒரு கனவு போல இருந்தது. வெகு நாட்கள் கழித்து உடல் முழுக்க ஆடை அணிவது அவர்களுக்கு உறுத்தியதும் கூட. கிண்டலாக ஒருவரை ஒருவர் பேசி சிரித்துக்கொண்டனர்.
............
2வருடங்கள் கழித்து... 
.... 18 பெண்கள் மாயம் -செய்தி. கடத்தப்பட்ட 18 பெண்களுக்கும் ஒரே வயது 18 என்பது ஆச்சர்யமாக இருந்தது. தன் டேபிளுக்கு வந்த கேஸ் பைலைக் கையில் எடுத்தபடியே இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த இதே போன்ற ஒரு நிகழ்வை யோசித்துக் கொண்டிருந்தார் புதிதாக புலனாய்வு அதிகாரியாக பதவியேற்று இருக்கும் அதிகாரி பாலகுரு.
..........
"இந்த முறை எல்லாம் 18. 24 வயதுடைய பெண்களுக்கு ஹைக்யூ நிறைய இருப்பது நமக்கும் பிரச்சனைதான். அதுனால தான் பதினெட்டு. எல்லாரும் இன்னும் ஒரு மணி நேரத்துக்குள்ள இங்க க்ளாஸிடடிஸ் ப்ளானட் க்கு வந்துருவாங்க." என சபர்ஸ் க்கு தகவல் கொடுத்துக் கொண்டு இருந்தான் பாலகணேசன். அந்த க்ளாஸிடடிஸ் ப்ளானட் கருநீல நிறத்தில் பனி படர்ந்து ஒரு ஆர்ட்டிக் கண்டத்தை கண் முன் காட்டிக்கொண்டு இருந்தது. குளிருக்கு இதமாய் பாலகணேசன் மூன்றாவது பாக்கெட்டின் சிகரெட்டை எடுத்துப் பற்ற வைத்து அதிர சிரித்துக் கொண்டு இருந்தான்!

- முற்றும் -

உரலிகள்:-
முகநூலில் மு பாலகுருநாதன்
முகநூலில் இப்பதிவு

நரகம் 2 கி மீ - பதினொன்றாவது அத்தியாயம்

எழுதியவர் : புவனேஷ்வரன் ராஜசேகர்

செவ்வாயில் நீர் இருக்கிறது!
கணேசனுக்கு எல்லாம் முடிவை நெருங்குவதாகப்பட்டது. இது பூமிக்காக நடக்கும் போட்டியல்ல, செவ்வாயைக் கைப்பற்றுவதற்கான போட்டி. அதாவது இன்னும் தெளிவாகச்சொல்லவேண்டுமெனில், செவ்வாயிலிருந்து கொண்டு பூமியை வசப்படுத்துவது எளிது. காரணம் எங்கிருந்தோ ஒரு ப்ளாக் ஹோலைக் கண்டுபிடித்து கஷ்டப்பட்டு வந்து பூமியைத் தாக்குவதை விட, அருகிலிருக்கும் செவ்வாய் கிரகத்தை முதலில் கைப்பற்றினால் அங்கிருந்து பூமியை கைப்பற்றுவது மிகவும் எளிது. கையிலிருந்த சிகரெட்டும் கடைசி இழுப்புக்காகக் காத்திருந்தது. அதேசமயம் இவர்களின் உரையாடல்களில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தான் ஆண்ட்டோ.
ஆண்டோவிற்கு அதிர்ச்சியாக இருந்தது, இவர்களை உடனே கொன்றுவிட்டால் என்ன என்று பரபரப்பாக இருந்தது. அதேசமயம், தகவல் தரும் கருவி ஒரு செய்தியைத்துப்பியது. "நாங்கள் நெருங்கிவிட்டோம்" உடனே பரபரப்பாய் கிளம்பி அட்மின் பில்டிங்கிற்கு விரைந்தான்.
செவ்வாயின் குட்டி மாடலாக இருந்த இந்த 2 கிமீ நீளமுள்ள கிரகத்தின், லெவல் 4 எனப்பட்ட கடைசி 300வது மீட்டரில் பெண்கள் நின்றுகொண்டிருந்தனர். மாலதி பேசத்தொடங்கினாள், "இந்த தோல் எந்த மிருகத்தோடதுன்னு புரியல, ஆனா பார்க்க எதோ விசித்திரமானதுன்னு மட்டும் புரியுது, பார்க்க ஒரு மாதிரி மனுஷனோட தோலோட ஒத்தும் போகுது, ஆனா உயரம் கம்மியா கருநீலக்கலர்ல இருக்கு, இங்க பாரு நம்ம மார்பு மாதிரியே இந்த தோல்லயும் ஒரு வடிவம் இருக்கு"
சந்தியாவுக்கு ஒருவிஷயம் புரிந்துகொண்டிருந்தது. இங்கே ஒரு பில்டிங் இருக்கிறது, எனில் இங்கே கண்டிப்பாய் மனிதர்கள் இருப்பார்கள். அப்போது வித்யா வடிவில் இருந்த ரோபோவை தூக்கிக்கொண்டு போனது மனிதர்கள்தான் எனில், அவர்கள் சென்றுவர ராக்கெட் இயங்கவில்லை. காரணம் அந்த ஹெலிகாப்டர்கள்! எனவே இங்கே கட்டாயம் ப்ளாக் ஹோல் இருந்தாக வேண்டும். எங்கே தேடுவது??
ஆக்ஸிஜன் மாஸ்க் எடுக்காமல் ஓடிவந்தவன் மூச்சுத்திணறி மயக்கம் போட்டிருந்தான். குறுந்தாடி அவசர அவசரமாய் வெளியே ஓடி வந்து மாஸ்க்கை அணிவிக்கையில் அந்த இளைஞனின் நாடி அடங்கத்தொடங்கியிருந்தது. குறுந்தாடியின் கண்களில் கலவரம் தெரிந்தது. இனி பெண்களைத் தனியாக சமாளிப்பது கஷ்டம். ஆண்டோ வேறு எங்கே போய்த்தொலைந்தான் எனத்தெரியவில்லை. வேறு வழியில்லை, ப்ளாக் ஹோல் இருக்குமிடத்தின் கதவைத் திறந்து வெளியே போய், துணைக்கு யாரையும் அழைத்து வருவதைத் தவிர வேறு வழியில்லை. இப்படி ஒரு முடிவுடன் பில்டிங்கினுள் நுழைந்தான், பட்டனை அவன் நெருங்குகையில் அங்கே பெண்கள் ப்ளாக் ஹோலின் கதவை நெருங்கியிருந்தனர்.
விண்கலம் கிரகத்தின் வாசலில் இருந்தது. "ஆண்டோ எங்கிருக்கிறாய்"? 3வது முறையாக குரல் ஒலித்தது.
ப்ளாக் ஹோல் ஏன் திறந்தே இருக்கிறது என்று சந்தேகத்துடன் கிரகத்தினுள் நுழைந்து கொண்டிருந்தவனை 10 ஜோடிக்கண்களும் கண்டுபிடித்துவிட்டன. அனைவரின் மேல் இருந்ததும் விண்கலத்தில் இருந்த க்ரூக்ஸ் கிரகவாசிகளின் தோல்கள். இந்த கிரகத்தின் சோதனைக்காக வந்து அதன் உயிரை விட்டிருந்த வேற்றுக்கிரக உயிர்கள்.
கனேசன் ஆண்டோவைப் பின் தொடர்ந்து வந்திருந்தான், கிஷோகரின் கூற்று சரியாகத்தான் இருந்தது. ஒவ்வொருமுறையும் ஆண்டோ ராக்கெட்டில் பயணிக்க முடியாது, எனில் ப்ளாக் ஹோல் கட்டாயம் இருக்கவேண்டும், மாலினியின் வளர்ப்புத்தந்தை சொன்ன தகவல்களை வைத்துப் பார்த்தால் அந்த ஆராய்ச்சிக்கூடத்தின் தீட்சரேகைகள் ப்ளாக் ஹோலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள பகுதி. விரைந்து வந்ததில் ஆண்டோ ப்ளாக் ஹோல் வழியாக நுழைவதைப் பார்க்கமுடிந்தது.
இனி நடக்கப்போவது கிட்டத்தட்ட போர், எதற்கும் தயாராய் இருக்கவேண்டும், ஸ்பேஸ் கன்கள் மட்டும் போதுமா எனத்தெரியவில்லை, "நையிராவிற்குத்தகவல் கொடு" கணேசன் கிஷோகருக்குக் கட்டளையிட்ட அதே விநாடி, அங்கே மாலதி கிசுகிசுத்துக்கொண்டிருந்தாள்.
"இப்ப இங்க சண்டைபோட்டு உயிரை விடலாமா? இல்லை முதலில் ப்ளாக் ஹோல் வழியா தப்பிச்சுப்போலாமா?" பெண்கள் யோசித்துக்கொண்டிருந்தனர்.
விண்கலம் அவசரமாகத் தரையிறங்கியது!!.........
(தொடரும்)

நரகம் 2 கி மீ - பத்தாவது அத்தியாயம்

எழுதியவர் : கிஷோகர் டைனமோ

எதிர்பாத்துக்கொண்டு இருப்பது எல்லா நேரத்திலும் அப்படியே நடந்துவிடாது என்பது கொஞ்சம் கிளிஷேவான தத்துவம் தான், என்ன செய்வது ? பல சமயங்களில் அது தான் பொருந்திப்போகிறது. பாலகணேசன் காத்துக்கொண்டிருந்த அந்த செல்வாக்கான தொலைபேசி அழைப்பும் அந்த கிளிஷேவுக்குள் அடக்கம். "ஃபோன் பண்ணுகிறேன் என்று சொல்லிவிட்டு எந்த வேசி வீட்டில் கிடக்கிறானோ?" திட்டிக்கொண்டே தன் கைகளிலும் முழங்காலிலும் ஒட்டிக்கொண்ட மண்ணை தட்டிவிட்டான் கணேசன். பின்னால் "தொமுக்" சத்தம் சன்னமாய் கேட்டது, ஆயிற்று , மதில் தாண்டி கிஷோகரும் குதித்து விட்டான்.
மண்டிக்கிடந்த புதர்களை விலக்கி தாங்கள் வெளியே காத்துக்கிடந்த ஆச்சிரமத்தின் அந்த பெரும் கேட்டின் உள்பக்கத்தை ஆராய்ந்தான். ஒரு தெருநாய் முகத்தை சாவியாக்கி அந்த இரண்டு பெரும் கதவுகள் இணையும் இடத்தில் துளைத்து துளைத்து கதைவை திறந்து வெளியே ஓடியது.
"கேட்டை திறக்காதே கணேசா.... எலக்ட்ரிக் ஷாக் இருக்கலாம்" , சொன்ன கிஷோகரும் கணேசனுக்கு பின்னால் நின்று நாய் ஓடியதை பாத்துக்கொண்டு இருந்தான். கணேசனுக்கு திட்டுவதற்கு மூட் இல்லை. ஆச்சிரமத்தின் பிரதான மண்டபம் என்று அனுமானிக்ககூடிய ஒரு கட்டடத்தை நோக்கி நடந்தார்கள்.
கணேசனுக்கு புதிராக இருந்தது. தான் ஊகித்தது மட்டும் சரியாக இருந்தால் இந்த ஆச்சிரமம் உட்புகுவதற்கு இவளவு அனுகூலமாக இருந்திருக்க முடியாது. கிஷோகர் எசரித்த போது கூட அவன் கதவை தள்ளிப்பார்க்க தயங்கியதற்கு அதுவும் ஒரு காரணம். துப்பாக்கி ஏந்தி இல்லாவிட்டாலும் சரி , கம்புகள் தடிகளோடு சரி இரண்டு பேரையாவது எதிர்பார்த்தான், கூடவே கொஞ்சம் நாய்களையும். எதையும் காணோம். ஆனால் இன்னொன்றை கவனித்தான், சற்றைக்கு முன்னர் வரை இந்த இடம் பலத்த பாதுகாப்போடு இருந்ததற்கான ஒரு வாசத்தை அவன் நாசி நுகர்ந்துகொண்டிருந்தது. இந்த உணர்வுக்காக தான் இன்னமும் அவன் இந்த டிடக்டிவ் வேலையில் இருக்க முடிகிறது, இல்லையென்றால் அவன் நையிராவை அன்றிரவு.... வேண்டாம்! அப்போதே போயிருக்க வேண்டிய வேலை.
பச்சை வர்ணத்தில் இறுக்க பூட்டியிருந்த ஒரு கதவின் முன்னே நின்றுகொண்டிருக்கிறார்கள் இருவரும். கணேசன் இடதுகையால் கைத்துப்பாக்கியை பிடித்தபடி வலது கையின் ஆட்காட்டிவிரலால் கிஷோகரை சுட்டிக்காட்டி , பின்னர் ஆட்காட்டிவிரலையும் நடுவிரலையும் தனது கண்ணுக்கு நேரே கொண்டுவந்து திரும்ப ஆட்காட்டிவிரலை மட்டும் நீட்டி அந்த வீட்டின் ஜன்னலை சுட்டிக்காட்டினான்.
"என்னடா? என்றான் கிஷோகர் சத்தமாக.
"டேய் மூதேவி... உன்னைய அந்த ஜன்னல் வழியா பாக்க சொன்னேன்டா.... "
"அத இதோ இப்போ சொல்ற மாதிரி சொன்னா என்ன?"
கிஷோகருக்கு ஹாலிவூட் படங்களின் பரீட்சயம் போதாது என்பது கணேசனுக்கு எப்பவோ தெரியும்.
கணேசன் கதைவை மெதுவாக தள்ளிப்பார்த்தான். யார் கண்டார் இந்த தடவையும் ஒரு நாய் வெளியே வந்தாலும் வரலாம். ஆனால் கதவு பூட்டி இருந்தது. தட்டலாமா? தள்ளி திறக்கலாமா ? என்ற யோசனையில் இருக்கும் போதே "யாராச்சும் இருக்கீங்களா?" குரல் கொடுத்துவிட்டிருந்தான் கிஷோகர்.
சற்றைக்கும் உள்ளே காலடி ஓசை கேட்டது , நெருங்கி நெருங்கி இப்போது கதவருகில் கேட்டுக்கொண்டு இருந்தது. இதோ கதவுக்கு பக்கத்தில் என்ற நினைத்த மாத்திரத்தில் சத்தம் நின்று போனது.
"யாரு...?" இது உள்ளிருந்து. ஒரு வயதான பெண்ணின் குரல்.
"கொஞ்சம் பேசணும்" இது கணேசன்.
"நீங்க பேசுற மாதிரி இங்க யாரும் இல்ல"
"நாங்க டிடெக்டிவ்ஸ், கதவ தொறக்கிறீங்களா இல்லையா?"
ஏன்டா ? என்பது போல் கிஷோகரை பார்த்தான் பாலகணேசன். கிஷோகர் தனது இரண்டு தோள்பட்டைகளையும் ஒருதடவை தூக்கி இறக்கினான். வேறு வழியில்லை என்பது அதன் பொருள். உண்மை தான்.. வேறுவழியில்லை சொல்லியாக வேண்டும்.
"துப்பாக்கி இருக்கா?" - இது ஒரு கிழட்டு ஆண் குரல் கதவுக்கு சற்று தூரமாய் உளிருந்து தான் கேட்கிறது.
கண்களை இடுக்கிக்கொண்டு தலையைத்திருப்பி கணேசனை பார்த்த பார்வையின் அர்த்தம் இது தான். 'என்னடா இவன் கூமுட்டையா இருக்கான்? எல்லாரும் க்ரெடென்ஷியல் தான் கேப்பாங்க .... இவன் துப்பாக்கி இருக்கான்னு கேக்குறான்?"
கதவில் பொருத்தப்பட்டிருந்த உள்ளிருந்து வெளியே பார்க்க கூடியதாக்கும் அந்த லென்சின் வழியே தன் துப்பாக்கியை நீட்டிப்பிடித்தான் கணேசன். கதவு திறந்து கொண்டது.
அது ஒரு விசாலமான ஹால், இது இருந்தது , அது இருந்தது , என்ற வர்ணனை எல்லாம் அனாவசியம். ஒரு ஹால் என்றால் கற்பனைக்கு வரும் அத்தனையும் அங்கே இருந்தது. காந்தி ஃபோட்டோ , நமீதா போஸ்டர்கள் மிஸ்ஸிங். மற்றப்படி எல்லாம் இருந்தது.
"நான் நேரா விஷயத்துக்கு வாரேன்.... இங்க மாலினியோட பேரன்ட்ஸ் யாரு....?"
கிழவன் திரும்பி கிழவியை பார்த்துக்கொண்டான். அவள் கண்களில் ஒரு சூனியம் மட்டும் தெரிந்தது, அதில் எதையும் வாசித்தறிய முடியாததால் கணேசன் திரும்ப கிழவன் பக்கம் திரும்பிக்கொண்டான்.
"இப்போதைக்கு நாங்க தான்...."
"புரியல..."
"மாலினியோட ஒரிஜினல் பேரன்ட்ஸ் நாங்க கிடையாது"
"அப்புறம்?"
"நாங்க கார்டியன்ஸ்...." "நாங்க மட்டுமில்ல இங்க இருந்த எல்லாருமே கார்டியன்ஸ் தான்"
"பெரியவரே... ரொம்ப குழப்புறீங்க"
"உங்க துப்பாக்கிய கொஞ்சம் கிட்டத்துல பாக்கலாமா?" "பரவாயில்லை ஸ்பேஸ் மோட ரிமூவ் பண்ணிட்டே குடுங்க"
இந்தாளுக்கு ஸ்பேஸ் மோட் எப்படித்தெரியும் என்கிற அதிர்ச்சி டிடக்டிவ்ஸ் இருவர் முகத்திலும் வெளிர் ரேகையாய் ஓடியது.
மறுபேச்சின்று துப்பாக்கியை கொடுத்தான் கணேசன், ஸ்பேஸ் மோட் ரிமூவ் பண்ண்ப்படவில்லை , கிஷோகரின் விரல் ட்ரிகரில் இருந்தது. "கிழவன் கொஞ்சம் துப்பாக்யை உயர்த்தினாலும் அந்த முன்மயிர் கொட்டிய வழுக்கை தலையில் இரண்டு புல்லட்டையாவது குறைந்தபட்சம் இறக்கு" அவன் டிடக்டிவ் புத்தி கட்டளையிட்டுக்கொண்டிருந்தது. ஆனால் கிழவன் துப்பாக்கியை ஆரய்ந்துவிட்டு "அற்புதம்" என்று மட்டும் சொல்லி திரும்ப கொடுத்துவிட்டான்.
"பெரியவரே.... மாலினி....." இது கணேசன்.
வேலையில் மட்டுமே கணேசன் கண்ணாய் இருப்பது அரிது. கிஷோகர் ஆச்சரியப்பட்டுக்கொண்டான். ஒன்றும் பிரம்மாதமில்லை, கிழவனின் பீடிகையெல்லாம் அப்படி.
கிழவன் கிழவி இருந்த திசை பார்த்து "ஆம்" என்பது போல தலையை ஆட்டினான். கிழவி எழுந்து பக்கத்து அறைக்கதவை திறந்துகொண்டு உள்ளே போனாள். சற்றைக்கெல்லாம் இரண்டு போட்டோக்களோடு திரும்பினாள். கிழவன் வாங்கி அதை கணேசனுக்கு முன்னால் பரப்பினான். ஒரு போட்டோவில் , இரண்டு இளைஞர்கள், இருவருமே விஞ்ஞானிகளாக இருக்கவேண்டும். வெள்லைக்கோட்டு போட்டு , டெஸ்டியூப் நிறைந்த ஒரு அறையில் நிச்சயம் ஒரு ட்ராஃபிக் கான்ஸ்டபிள் நிற்கவோ வேறெந்த தொழில்செய்வோருமோ நிற்கவோ வாய்ப்பே இல்லை. ஆக விஞ்ஞானிகள் தான். அடுத்த ஃபோட்டோ ஒரு குரூப் போட்டோ , ஆனால் அசாதாரணமாக இருந்தது.
"கணேசா இருடா.... " - இது கிஷோகர். சொல்லிய அவசரத்தில் தனது டப்பில் அவசர அவசரமாக எதையோ தேடினான்.
என்ன என்பது போல முகத்தை கேள்விக்குறி செய்து டப்பையே பார்த்துக்கொண்டிருந்தான், கணேசன். கிழவனும் கிழவியும் கூட ஆர்வம் காட்டினார்கள்.
"இங்க பாரு... இது நீ கலெக்ட் பண்ண‌ சொன்ன‌ டீ கடைக்கு முன்னால இருந்த சிசிடிவி கமிராவுல பதிவான அந்த சிகரெட் விட்ட ஆசாமியோட போட்டோ...." "தோ.... இந்த போட்டோ அன்னிக்கு செத்துக்கிடந்திச்சே ஒரு பொண்ணு , அந்த டெட் பாடி போட்டோ "
"அதுக்கு இப்போ என்னாடா?'
"டேய்.... நல்லா பாருடா , அந்த டீக்கடை ஆசாமியோட முகம் இன்னொரு சிசிடிவிலயும் லிங் ஆகி இருக்கு, அங்க அவன் கூட நிக்கிற மற்ற ஆசாமி தான் இதோ இந்த ரெண்டு விஞ்ஞானிகள்ள ஒருத்தன்" " இந்த டெட்பாடி மூஞ்சியும் இதோ இந்த குரூப் ஃபோட்டோவுல இருக்கிற மூணாவது பொணோட முகமும் மேட்ச் ஆகுது..."
"ஆன்டோ..." கிழவன் சொல்லிக்கொண்டே கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தான், அந்த நிமிர்தலில் நிச்சயம் ஒரு கம்பீரம் இருக்கவில்லை. இனம்புரியாத ஒரு அச்சமும் , இயலாமையும் வெளிப்பட்டதை இரண்டு டிடக்டிவ்ஸும் கவனிக்க தவறவில்லை.
மேலே பேசு... என்பது போல் கிழவனின் முகத்தை பார்த்தான் கிஷோகர்.
தம்பி நானும் ஒரு விஞ்ஞானி தான், அதோ அந்த ஃபோட்டோவுல ஆன்டோ கூட இருக்கிறது நான் தான்.
எங்கேயோ இடித்தது, ஆன்டோ என சொல்லப்பட்டவன் இளமையாக இருந்தான். இதோ இந்த போட்டோவில் இருப்பது போலவே . ஆனால் இந்த கிழவன் தான் போட்டோவில் இருக்கும் மற்ற விஞ்ஞானி என்றால் ஆன்டோவுக்கும் இப்போது வயசாகி இருக்க வேண்டுமே ? அல்லது ஆன்டோவோடு இருப்பது கிழவன் இல்லையா? வேறு யாரோ ஆளா?
இவர்கள் நெற்றிச்சுருக்கங்கள் கிளப்பிய கேள்வியை புரிந்துவிட்டவனை போல கிழவன் சொன்னான் " ஆன்டோவுக்கு நூற்றிமுப்பது வயது " "அவன் எப்போதும் இப்படியே தான் இருப்பான், சாகும் வரை"
எதோ ஒரு நூலைப்பிடித்து சரியான வழியில் போய்க்கொண்டிருக்கிறோம் என்று கொஞ்சம் ஆசுவாசிக்கொண்டிருந்த டிடக்டிவ்ஸ் இருவரும் உண்மையில் சோர்ந்துபோனார்கள். ஒரு பைத்தியத்திடம் மாட்டிவிட்டோமோ என்று நினைத்துப்பார்க்கும் போது அவர்களுக்கு மிகுந்த சித்தவியாகூலமாக இருந்தது.
நம்பிக்கையின்மையை மிகத்தெளிவாக முகத்தில் காட்டிகொண்டு கிழவனை பார்த்தார்கள் இருவரும். ஆனால் கிழவன் முகத்தில் அப்படியொரு இறுக்கம் தெரிந்த்து, அந்த இறுக்கம் நிறைய உண்மைகளால் கட்டப்பட்டு இருந்தது போல இருந்தது.
"ஆன்டோ... எதிர்காலத்தில் இருந்து வந்தவன் , அவன் காலத்தில உடலை இளமையா வச்சிக்கிற முறை சாத்தியம். அதனால தான் அவனால் அந்த இளமையை மெயின்டெயின் பண்ண முடியுது. அது இங்கே ஒரு பிரச்சினையே இல்ல.... கிட்டத்தட்ட இருபத்து நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் சீனியர் ஹாஸ்பிட்டல்ல பிறப்பு நோய்கள் சம்மந்தமா ஆராட்சி பண்ணிட்டு இருந்தப்போ தான் எனக்கு ஆன்டோவோட அறிமுகம் கிடச்சிது. ஆரம்பத்துல அவனோட டைம் ட்ராவெல் கதைகள் எனக்கு நம்பிக்கை இல்லன்னாலும் போக போக உண்மைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். ஒரு ஆராட்சி பத்தி சொன்னான், கொழந்தைகள வச்சி.... அதுவும் பெண் குழந்தைகள். பன்ரெண்டு குழந்தைகள் வேணும்னு சொன்னான். ஏதோ தப்பாவே பட்டிச்சி... ஆனா... ஆராட்சி முடிவுல எனக்கு நிறைய புகழ் வரும்ன்னான்.ஒத்துக்கிட்டேன் "
ஒரே மூச்சில் சொல்லிவிட்டு கொஞ்சம் தண்ணீர் எடுத்து குடித்துக்கொண்டார் கிழவர். "ன்" விகுதி இப்போது சேர்க்க முடியாது. விஞ்ஞானி என்று தெரிந்துவிட்டதே, ஒரு எழுத்தியல் மரியாதைக்காகவாது "ர்" விகுதி சேர்த்தாக வேண்டுமே.
" அவன் பிளான் படி பன்ரெண்டு பெண் குழந்தைகள் ஒரே நாள்ல பிறக்கிற மாதிரி எல்லா சயின்டிஃபிக் ஏற்பாடையும் நானே பண்ணினேன். இதுக்கு வசதியா அவன் சீனியரை கைக்குள்ள போட்டுகிட்டான். அவரு கிட்ட என்ன சொன்னானோ எனக்கு தெரியாது . ஆனா ரெண்டுகொழந்தைங்க ஒதோ நாளே டெலிவரி ஆயிடிச்சு, ஆனா அதை அவன் பெருசா எடுத்துக்கல.... "
"ஆமா.. ஏன் ஒரே நாள்..." குறுக்கே புகுந்தது கணேசன்.
"எந்த சயின்டிஃபிக் சோதனைக்கும் சோதனைப்பொருள்கள் ஒரே மாதிரி இருக்கணுங்கிறது அடிப்படை விதி தம்பி"
"அப்புறம்...?"
"பிறந்த எல்லா பெண் குழந்தைகளையும் அவங்க பேரன்ட்ஸ்கிட்ட இருந்து பிரிச்சு எங்க கண்காணிப்பு மட்டு இருக்கிறதுக்காக பன்ரெண்டு கார்டியன்ஸ் கிட்ட குடுத்து வளர்க்க வச்சோம். இங்க தான் எல்லாம் இருந்தாங்க, இங்க தான் அந்த குழந்தைகள வளர்த்தோம்... ஆரம்பத்துல மாலினிய வளர்க்க ஏற்பாடு பண்ணின ஒரு ஃபமிலி வேற ஏதோ காரணத்தால சூசைட் பண்ணிக்க , கடைசி நேரம் வேற வழியில்லாம என்னைய வளர்க்க சொன்னான் ஆன்டோ.."
கண்களை கொஞ்சம் அகல் திறந்து உட்கார்ந்தான் கணேசன், ஏதோ நெருங்கி வருவதாய் அவன் உள்ளுணர்வு சொல்லியது. இந்த உள்ளுணர்வு மட்டும் இல்லாவிட்டால் , அன்றைக்கு இரவு நயிராவை.... வேண்டாம், இந்த கதைக்கு அது அவசியமில்லை.
"அந்த பொண்னுங்களுக்கு ஒரே மாதிரியான எக்ஸ்பெரிமென்டல் மெடிசின்ஸ் குடுத்தோம் , குறிப்பா ஒரு விஷேச பிளட் குரூப்பும்......"
"ஆனா இதெல்லாம் எதுக்காக?"
"ஆன்டோ எதிர்காலத்துல இருந்து வந்திருக்கான், அவனோட ஆராட்சிகளுக்குன்னே விசேசமா தயாரான பொண்ணுங்க இவங்க... சீனியர் அப்புறம் மத்தவங்க கிட்ட ஒரு கேம் ஷோ வைக்க போறதா சொல்லி ஏமாத்திக்கிட்டு இருக்கான். ஆனா எனக்கு தான் உண்மை தெரியும். ஏமாந்த சீனியர் ஆன்டோவுக்கு தான் தான் பாஸ் என்ட நெனைப்புல இருக்காரு, உண்மையில் ஆன்டோ தான் எல்லாத்துக்குமே டாப். ஆனா... அந்த பொண்ணுங்கள வச்சி இவன் பண்ணுற ஆரட்சியை மத்தவங்க ஒரு கேம் ஷோவா பாக்குற மாதிரி செட்டப்பையும் செஞ்சிருக்கான், நெறைய கோடீஸ்வரங்க தங்கலோட பணத்தை கொட்டிக்கிட்டு இருக்காங்க. அவன் ஆராட்சிபண்ணுற அந்த விஷேச லொக்கேஷனுக்கு அடப்ட் ஆகிற மாதிரி இருக்க தான் அந்த எக்ஸ்பெரிமென்டல் மெடிசின்ஸ் அன்ட் பிளட் குரூப்"
"ஆமா அந்த லொக்கேஷன் எங்க இருக்கு?"
"அது க்ரூஸ் கிரகத்தில்"
"சரி... ஆனா எதுக்கு இந்த எக்ஸ்பெரிமென்ட்"
"ஆன்டோ எதிர்காலத்துல இருந்து வந்திருக்கான், தன்னோட காலத்துல தான் தான் பெரும் கோடீஸ்வரனா இருக்கணுங்கிறது தான் அவனோட நோக்கம்" " அதுக்கான ஏற்பாடுகள தான் இப்போ பண்ணிட்டு இருக்கான்"
"ஆமா... இங்க இருந்த மத்த கார்டியன்ஸ் எல்லாரும் எங்க? - ஏன் செக்கியூரிட்டியே இல்ல....?" கணேசன் இந்த கேள்வியை கேட்டது ஏதோ தொடர்பில்லாமல் இருப்பது போல இருந்தாலும் , பேசாமல் இருந்தான் கிஷோகர்.
"இருந்தாங்க.. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி க்ரூஸ்ல இருந்து ரெட் அலார்ட் வந்திசு காலி பண்ணிட்டு போய்ட்டாங்க"
"உங்கள மட்டும்......"
"ஏன் விட்டு வச்சாங்கன்னா? என்னால ஆக வேண்டிய காரியம் ஒண்ணு இருக்கு ஆன்டோக்கு, அதனால தான்"
"அதுசரி... சாகப்போற நேரத்துல உண்மைய உளறுற தமிழ்சினிமா வில்லன் போல , கேட்ட ஒடன எல்லாம் சொல்றீங்களே , எதுக்கு?"
"என்னோட பாதுகாப்புக்கு"
"புரியல"
"தன்னோட வேலை முடிய ஆன்டோ எப்புடியும் என்னைய கொல்லுவான், தன்ன பத்தின உண்மைய இன்னொருத்தரு கிட்ட சொல்லியிருக்கேன்னு தெரிஞ்சா நிச்சயம் அது யாருன்னு கண்டுபிடிக்கும் வரைக்கும் நான் உசிரோட இருக்கிறது உத்தரவாதம்" " அந்த கேப்புல நீங்க ஆன்டோவோ அரஸ்ட் பண்ணுவீங்க இல்லன்னா கொல்லுவீங்கன்னு நம்புறேன்"
கிழவரே தொடர்ந்தார்.
"நீங்க ஸ்பேஸ் டிடக்டிவ்ஸ்ன்னு உங்க துப்பாக்கிய பாத்து தெரிஞ்சுக்கிட்டேன். ஆரம்பத்துல துப்பாக்கிய நீட்ட சொன்னதும் அதுக்கு தான்"
"அந்த டெட் பாடி பொண்ணு பத்தி ?"
"அவ வித்தியா, எங்க எக்ஸ்பெரிமென்டல் பொண்ணுல ஒண்ணு" அவளவு தான் எனக்கு தெரியும் ." ஆன்டோ பொண்ணுங்க விசயத்துல வீக்குன்னும் தெரியும்"
ம்ம்... இதை ஊகிக்க முடியாவிட்டால் கணேசனும் , கிஷோகரும் டிடக்டிவ் வேலையை விட்டு எங்கேயாவது ஃபேஸ்புக்கில் பதிவெழுத போகலாம்.
இப்போது கணேசன் கார்டியன்ஸ்சுக்கு என்னானது பற்றி கேட்ட கேள்வியாலும் அதன் தொடர்ச்சிகளாலும் தொடர்பறுந்து போன அந்த உரையாடலை உயிர்பித்தான் கிஷோகர்.
"ஆமா... ஆன்டோ ஏதோ பணக்காரனாக போறான்னு சொல்லிக்கொண்டு இருந்தீங்களே... என்ன மேட்டர் அது"
"அவன் எதிர்காலத்தோட ஒரு பொக்கிசத்த தேடி வந்திருக்கான். அவனோட காலத்துல அமேரிக்காவும் அதோட நேச நாடுகளும் , ரஷ்யாவும் அதோட நேச நாடுகளும் ஒண்னுக்கொண்ணு சண்டை போட்டுக்கிட்டு இருக்கிற விஷயத்த இன்னொரு கிரகத்துல தேடுறான். அதை கொண்டு போய் ஏதாவது ஒரு அணி கிட்ட குடுத்தா அந்த அணி தான் வல்லரசு , உலக ஆர்மி எல்லாமே.. இவனும் ஒலகத்தோட முதல் பணக்காரன் ஆயிடுவான்"
"என்ன தேடிட்டு இந்த எக்ஸ்பெரிமென்டல் எல்லாம் பண்ணிகிட்டு இருக்கான்?"
கிழவர் சில நாட்களுக்கு முன்னர் வந்த நாழிதளை விரித்துப்போட்டார்.
"செவ்வாயில் தண்ணீர் இருப்பதை நாஸா உறுதி செய்தது"

Thursday, September 24, 2015

நரகம் 2 கி மீ - ஒன்பதாவது அத்தியாயம்

எழுதியவர் : ஹரீஷ் கணபதி

தோராயமாக மூன்றே முக்காலாவது சிகரெட்டை ஊதிக் கொண்டிருந்தான் கணேசன். மாலினியின் மூலத்தைக் கண்டுபிடிக்க முதலில் அவள் வளர்ந்த அநாதை ஆசிரமத்தை அடைய வேண்டும். அதில் ஏகப்பட்ட சிக்கல்கள். அந்த ஆசிரமம் ஏதோ இரும்புக் கோட்டை மாதிரி ஏகப்பட்ட விதிமுறைகளைப் போட்டு வைத்துக் கொண்டு இவனை அருகிலேயே நெருங்க விடவில்லை.
தெரிந்த அறிந்த ஆட்கள் மூலமாக இரும்புக் கோட்டையின் உட்புக முயற்சி செய்து கொண்டிருந்தான். அந்த முயற்சியின் ஒரு பகுதியாக செல்வாக்கான நண்பன் ஒருவனிடமிருந்து அழைப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்., அது வந்தால் தான் மேற்கொண்டு தொடர முடியும்.
நடுநடுவே அந்த டீக்கடையில் ஆஜானுபாகன் சொன்ன வார்த்தைகள் காதில் ஒலித்தபடியே இருந்தன.அதன் அர்த்தம் என்னவாய் இருக்கும்?
“பெரிய அறிவாளி மயிரு.. என்னையே ஏமாத்தறாளா,... சாவுடி”....
-----------------
ஆன்டோ சிகரெட் புகையை அந்த ஆஜானுபாகனின் மூஞ்சியிலேயே வட்டமாக ஊதினான். அவன் துளி கண்ணைக் கூட அசைக்காமல் நின்றான். முகம் இறுகியிருந்தது. முகமே அப்படித் தான்.
“என்ன அந்த வித்யாலக்ஷ்மி ரொம்ப முரண்டு பண்ணாளா?”
“சின்ன பீஸு. டக்குனு முடிஞ்சிருச்சு பாஸு. ஒண்ணும் பிரச்னையில்ல.” – ஆறடியன்.
“சரி நீ போ. வேலிகிட்டயே இரு. தேவைப்பட்டா கூப்பிடறேன்” .
“மண்டையை ஆட்டி விட்டு அகன்றான் தடியன்.
ஆத்திரம் கோபம் படபடப்பு இவையெல்லாவற்றையும் இந்த நூற்றுக் கணக்கான வருடங்களில் கடக்கப் பழகி விட்ட ஆன்டோவுக்கு சவாலாக இருந்தது, இருப்பது, இந்த ஒரே விஷயம் தான்.பெண் உடல். இதை எவ்வளவு முயற்சி செய்தும் கடக்க முடியாதது அவனுக்கு ஆச்சரியமாகவே இருந்தது. சில சமயங்களில் தன் லட்சியங்களுக்கு இடையூறாக இருந்தது எரிச்சலாகவும் இருந்தது.
அதனால் தேவையில்லாமல் இரு கொலைகள் வேறு அதிகமாகச் செய்ய வேண்டியதாகப் போய் விட்டது. ஒரு கொலை முடிந்து விட்டது. இன்னொன்று இனிமேல் தான். இதோ இப்போது வெளியே போகிறானே இந்த ஆஜானுபாகன் தான் அடுத்து.
அதென்னவோ அந்த வித்யாலக்ஷ்மி மேல் அப்படி ஒரு ஆசை. உடம்பில் சிப் செட் செய்து அவளை அனுப்ப வேண்டிய இடத்தில் தேவை இல்லாமல் பல கோடிகள் செலவு செய்து ஒரு எந்திரத்தை அனுப்ப வேண்டியதாகி விட்டது.
அவளை ஆசை தீர அனுபவிக்கலாம் என்று என்னுடனே வைத்துக் கொண்டால் அவள் என்னடாவென்றால் சீனியருக்கும் அந்த கிரக ஆட்களுக்கும் இடையே நான் ஆடும் என்னுடைய டபுள் கிராஸ் ஆட்டங்களையெல்லாம் கண்டுபிடிக்கப் பார்க்கிறாள்.
இந்த கிரகத்துக் காரர்களுக்கு வேறு நான் சீனியரோடு இருக்கும் போது கொடுக்கும் அப்டேட்டுகள் போதவில்லையாம். நான் வித்யாலக்ஷ்மிக்கு பதில் எந்திரத்தை அனுப்பப் போகும் விஷயம் தெரிந்து கொண்டார்கள்.
அவர்களுக்கு தெரியாமல் ஏதேனும் செய்து விட முடியுமா என்ன? அதைத் தெரிந்து கொண்டு அந்த ரோபோட்டுக்குள் தகவல் சேகரித்தனுப்பும் சிப்பை வைத்தே ஆக வேண்டும் என்று கட்டளையிட்டு நிறைவேற்றியும் கொண்டு விட்டார்கள்.
சீனியருக்கு ரோபோட்டை அனுப்பியது நான் தான் எனத் தெரியாமல் அதை அனுப்பியதுமல்லாமல் அதற்கும் சிப்பையும் வைத்தது எவ்வளவு பெரிய சாதுரியம். அது ரோபோ என்று தெரிந்த பின்னும் என் மீது அந்தாளுக்கு துளி சந்தேகம் கூட வரவில்லை.
இவள் என்னடாவென்றால் என்னை சைக்கோ என்கிறாள் கொலைகாரன் என்கிறாள். என்ன தான் இது போன்ற வார்த்தைகளெல்லாம் என்னைச் சுடாதெனினும் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறாகவே இருந்தாள். வேறு வழியில்லாமல் அவளையும் அவள் மேல் இருந்த ஆசையையும் போட்டுத் தள்ள வேண்டியதாகப் போய் விட்டது.
கையில் இருந்த சிகரெட்டின் கங்கு சுடவே சட்டென்று சுய நினைவுக்கு வந்தவன் ஸ்ஸ்.. என்று அந்த சிகரெட்டை உதறி விட்டு அடுத்ததை பற்ற வைத்த அதே நொடியில் காம்பவுண்டின் வலப் பக்கத்தின் சென்சாரிலிருந்து அபாய ஒலி பீப் பீப் பீப் என விடாமல் எழும்ப அவன் மேஜையில் இருந்த லேப்டாப்பில் சிகப்பு நிறத்தில் அந்த எழுத்துக்கள் மின்னி மறைந்தன.
“ ரெட் அலர்ட்!!!!ரெட் அலர்ட்!!! ரெட் அலர்ட்!!!”
---------------
பின் பக்க வழியே அந்தக் கட்டிடத்துக்குள் நுழைந்த மாலதியைத் தொடர்ந்து பெண்களும் நுழைந்தனர். கைகளில் படர்ந்த பச்சையை மாலதி கவனித்தாலும் அதைப் பெரிதாய் சட்டை செய்யவில்லை. செடிகளிலிருந்து ஏதேனும் சாறு வழிந்திருக்கும் என்று எண்ணினாள்.
கால்கள் மெலிதாக நடுங்கத் துவங்கியிருந்ததை பயத்தின் விளைவு என எண்ணி ஒதுக்கினாள்.சட்டென்று அவளை முந்திச் செல்ல முயன்ற ஒரு பெண்ணை மூச்சுக் காட்டாமல் கைகளால் குறுக்கிட்டு நிறுத்தினாள்.
கேமரா என்பது போல் செய்கை செய்து மேலே காட்டி தலையைச் சுற்றி விரலை ஆட்டினாள். அவள் செய்கையைப் புரிந்து கொண்ட பெண்கள் எங்கேனும் கேமரா இருக்கிறதா என்று தங்களால் முயன்ற வரைக்கும் சுற்றிலும் பார்த்தனர்.
தங்கள் திருப்திக்கு உறுதி செய்து கொண்ட பின்பு நகரத் துவங்கியவர்களை மாலதி சுவரோரம் படிந்திருந்த ஆளுயர விளக்குகளின் நிழலிலேயே நடந்து வருமாறு பணித்தாள். அவள் முன்னே நடந்து கொண்டிருந்தாள். கைகளும் இப்போது மெலிதாக நடுங்கத் துவங்கியிருந்ததையும் கண்கள் லேசாகக் கலங்கலாகத் தெரிவதையும் சட்டென்று கவனித்தவள் நின்றாள். கண் மங்கலாகிக் கொண்டே வந்தது. சட்டென்று ஏதோ உணர்ந்தவளாக மூச்சை இழுத்து விட்டுக் கண்களை வலுக்கட்டாயமாகப் பெரிதாக்கியவள் கைகளிலிருந்த பழுப்பு நிற மலர்களை கசக்கித் தூர எறிந்தாள்.
எல்லாரையும் அதையே செய்யச் சொல்லி சொன்னாள். இன்னமும் அந்த சாற்றின் வீரியம் தாக்காத அவர்கள் குழம்பினாலும் மாலதியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அந்தப் பூக்களை வீசி எறிந்தனர். பூக்களை வீசி எறிந்ததும் தற்காலிகமாகக் கிடைத்த ஆடையைப் பறிகொடுத்தாற் போல் பரிதவிப்பு அவர்கள் எல்லாருக்கும். நெளிந்தனர்.
திடீரென அந்த வாடை அவர்களைத் தாக்கியது. இன்னதென்று உணர முடியாத ஆனால் கொடூரமான ஒரு வாடை., சட்டென்று மூக்கைப் பொத்திக் கொண்டனர். லேசாகக் குமட்டுவது போலிருந்தது. வாடைக்கு மூக்கு பழக ஓரிரு நிமிடங்கள் ஆனது. வாடை வந்த திசையை நோக்கி மாலதி நடக்கத் துவங்கினாள்.
பாதை குறுகிக் கொண்டே போனது. தலைக்கு மேலிருந்த உத்திரமும் உயரம் குறைந்து கொண்டே வந்தது. ஒரு கட்டத்தில் மெல்லிய வெளிச்சம் மட்டுமே இருந்த ஒரு இடத்தில் வந்து முடிந்தது. வாடை அங்கிருந்து தான் வருகிறது என்பது உறுதியாகத் தெரிந்தது. அங்கே வரிசையாகத் துணி காய வைப்பது போல் கொடிகள் இருந்தன. அவற்றில் வரிசையாக்ச் சாரி சாரியாகத் தொங்க விடப்பட்டிருந்தது... அது என்ன?
மாலதி அருகில் போய்த் தொட்டுப் பார்த்தாள். அது... அது..... ஏதோ ஒரு மிருகத்தின் தோல். சத்தியமாக அவளுக்குத் தெரிந்த எந்த மிருகத்தின் தோலும் இல்லை அது. இந்த கிரகத்தின் ஏதேனும் ஒரு விலங்கினுடையதாக இருக்கலாம். கரு நீல நிறத்தில் என்ன மிருகம்? சட்டென்று அவளுக்கு ஒரு யோசனை தோன்றியது. வரிசையாகத் தொங்கிய தோல்களில் ஒன்றை எடுத்துப் பார்த்தாள்.
அதற்குள் பின்னால் கிசுகிசுவெனப் பேசத் துவங்கியிருந்த இரண்டு பேரை ஷ்.. என்று மெல்லிய ஆனால் வலிமையான அதட்டல் சப்தம் கொண்டு அடக்கினாள். கையிலிருந்த தோலைப் பார்த்தாள். கிட்டத்தட்ட ஒரு சட்டை போன்ற வடிவிலிருந்தது. சட்டென்று முடிவெடுத்தவள் அதை சட்டை போல் மேலே போர்த்திக் கொண்டாள். வாடை ஒவ்வாததாக இருந்தாலும் மேலே போர்த்திக் கொள்ள ஏதோ கிடைத்ததே அவளுக்குப் போதுமானதாக இருந்தது. அந்த ஆடை அவள் முழங்கால் வரை தொங்கியது.
மற்ற பெண்களைப் பார்த்தாள். அவளை பின் பற்றி அவர்களும் ஆளுக்கொரு தோலை எடுத்துப் போர்த்திக் கொண்டனர். எல்லாருக்கும் ஒரு புது நம்பிக்கை வந்தது போலிருந்தது.
இதற்கு மேல் இங்கிருப்பது ஆபத்து என்பதை உணர்ந்த மாலதி சுற்றும் முற்றும் பார்த்தாள். அப்போது நிமிர்ந்து பார்த்ததில் வெளிச்சம் மழுங்கடிக்கப்பட்ட சாளரம் ஒன்று தெரிந்தது.
இரண்டு பெண்களைக் குனியச் சொல்லி சைகை காட்டினாள். அவர்கள் மதுகின் மேல் ஏறி அந்த சாளரத்தைத் துடைத்தாள். கட்டிடத்தின் முன் பக்கம் மேலே தெரிந்தது. இருளில் படபடப்பில் நடந்து வந்ததில் சரிவில் வந்திருக்கிறோம் என்று தெரியாமேலே வந்திருக்கிறார்கள், சாளரம் ஓர் ஆள் நுழையும் அளவு இருந்தது.
சற்றே பலம் கொடுத்து தள்ளவும் சிறு சப்தம் கூட இல்லாமல் திறந்து கொண்டது.. மாலதி எல்லாருக்கும் செய்கை செய்து விட்டு மெல்ல சாளரம் வழியே வெளியேறினாள்.
பின் ஒவ்வொரு பெண்ணாக
-------------------
ரோபோவை உள்ளே கொண்டு வந்து சேர்த்த அசதியில் அமர்ந்தபடி அசிரத்தையாய் சிசி டிவி கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்த குறுந்தாடி, திரையின் ஓரத்தில் வெகு மூலையில் தெரிந்த அந்த சலனத்தில் அதிர்ந்தான். உற்றுப் பார்த்தான். ஒவ்வொரு பெண்ணாக சாளரம் வழியே வெளியேறுவது தெரிந்தது.
:மை காட்.... வந்துட்டாங்க. பில்டிங்குக்குள்ளேயே வந்துட்டாங்க.” என்று பதறியவன் அருகில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞனை உலுக்கி எழுப்பினான். “யூ பூல்... எழுந்திரு.. கெட் அப்.. என்ன நடக்குதுன்னு பாரு “,
அடித்துப் பிடித்து எழுந்த அவன் கண்கள் திரையில் நிலை கொண்டன. அவனும் அதிர்ந்தான். அடுத்த நொடி நாற்காலியைத் தள்ளி விட்டு எழுந்தவன் விரைந்து வெளியே ஓடினான்.
அதைப் பார்த்து அதிர்ந்த குறுந்தாடி “ ஏய்.. ஏய்.. வெயிட்.. வெளியே போகாதே.... மாஸ்க் மாஸ்க்... என்றவன் சட்டென்று நெஞ்சைப் பிடித்துக் கொண்டு நாற்காலியோடு சாய்ந்தான்.
வெளியே வந்த இளைஞனின் கண்கள் பெண்களைத் தேடின.
மூச்சு பெரிதாக வாங்கியது. அது ஓடி வந்ததால் அல்ல. அதை அவன் உணரும் போது மெல்லக் கண்கள் இருட்டத் துவங்கின. மூச்சுக் குழல் ஆக்சிஜனுக்குப் போராடத் துவங்கியது.
(தொடரும்)

உரலிகள்:-