நான் இதுவரைக்கும் ரெண்டே ரெண்டு ஜோம்பி படங்கள்தான் பார்த்திருக்கேன். ஒன்னு I am legend. இன்னொன்னு Shaun of the dead. மத்தபடி அந்த ஜோனரே எனக்கு பிடிக்காது. ஒன்னு வில் ஸ்மித்-க்காக பார்த்தேன். இன்னொன்னு Edgar Wright-க்காக. இப்போ Train to busan. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னதுக்காக பார்க்க ஆரம்பிச்சி அதோட முதல் காட்சி உள்ள சடார்னு இழுத்துப் போட்டதால முழு படத்தையும் பார்த்தேன். ரொம்ப ரொம்ப ரொம்ப ரசிச்சேன்.
ஒரு பெரிய கலவரமோ, உலக அழிவோ அல்லது இந்த மாதிரி நோய் பரவி ஜோம்பி ஆகுற படங்கள்லயோ ஒரு விஷயம் பேசிக்கா இருக்கும். அது எமோஷனலா நாம அந்தப் படத்தோட எந்தளவுக்கு பான்ட் ஆகுறோம் அப்படிங்கிறது. ஏன்னா எமோஷனலா பான்ட் ஆகலைன்னா யார் செத்தாலும் பொழச்சாலும் அதைப் பத்தி நமக்கு கவலை இருக்காது. 2012 படத்துல கூட உலகம் அழியப் போறது மறந்து ஹீரோவும், அவன் குடும்பமும் தப்பிச்சாங்களா அப்படின்னுதான் நாம யோசிப்போம். இந்த மாதிரியான செண்டிமெண்ட் விஷயங்களை புகுத்தி நம்மளை ஈஸியா உள்ள இழுக்குறதுதான் இந்தப் படங்களோட முழு வெற்றியும்.
நாம யார் யாருக்காக எல்லாம் ரொம்ப ஈஸியா இரக்கப்படுவோம் ? குழந்தைகள். கர்ப்பிணிப் பெண்கள். இது ரெண்டுமே இந்தப் படத்துல உண்டு. அவங்களைக் காப்பாத்தணும்னா அதுக்கு ஒரு ஸ்ட்ராங்கான ஆள் தேவை. அவங்களும் உண்டு. படம் பார்க்கும்போது நம்மளோட மொத்தப் பார்வையும் அந்த குழ்நதை அப்புறம் அந்த கர்ப்பிணிப் பெண் மேலயும் அவங்களை சார்ந்தவங்க மேல மட்டுமே இருக்குற மாதிரி அட்டகாசமா திரைக்கதை அமைச்சிருக்காங்க. கடைசியில ஏதோ நம்மள கிண்டல் பண்ற மாதிரி," இவங்களுக்காகத்தானடா இவ்ளோ நேரம் தம் பிடிச்சிட்டு உக்காந்திருந்தீங்க? போ.. அவங்க உயிரோடதான் இருக்காங்கன்னு." இயக்குனர் நம்மள கேலி பண்ற மாதிரி உணர்ந்தேன்.நிஜமா.
எதனால அவங்கெல்லாம் ஜோம்பி ஆனாங்க அப்படிங்கிற காரணத்தை ஒரே ஒரு வசனம் மூலமா அதுவும் போன்-ல ஒருத்தன் சொல்ற வசனம் மூலமா மட்டுமே சொல்றதுக்கெல்லாம் ஒரு கெத்து வேணும். ஆனா அடஙக ஒரே ஒரு வசனத்தால மட்டுமே முக்கியமான ஒரு கதாபாத்திரம் சாகும்போது நமக்கு அதுவும் சேர்ந்து ஞாபகம் வர்ற மாதிரி செஞ்சதுதான் மேஜிக். excellent screenplay.
முதல்ல இருந்தே நாம வெறுக்குற ஒரு கதாபாத்திரத்தை கடைசி ஒரு வரி வசனத்துல ,"அடச்சே.. இதுக்குதான் இவன் இவ்ளோ துடிச்சிக்கிட்டு இருந்தானா.. பாவம்..'-ன்னு சொல்ற மாதிரி வச்சாங்க பாருங்க. இயக்குனர் நிறைய எம்ஜிஆர் படம் பார்த்து வளர்ந்தவர் போல.
ஒரு ஆக்க்ஷன் படத்துக்கான பில்டப் எப்படி இருக்கணும்ங்கிறதுக்கு இந்தப்படம் இன்னொரு உதாரணம். ட்ரெயின் குகைக்குள்ளே எப்போ போகும்னு நம்மள ஒரு கட்டத்துல யோசிக்க வச்சதுலயே அது தெளிவா தெரிஞ்சிரும். அதேமாதிரி ஒவ்வொரு கதாபாத்திரமும் தனித்தனியா விளக்கப்படாம கதை போற போக்குல நம்மளே இவன் இனிமே இப்படித்தான் ரியாக்ட் பண்ணுவான்னு சரியா யோசிக்க வச்சது இன்னொரு செம்ம மேட்டர். நிறைய கத்துக்கலாம்.
கொஞ்சம் ரத்தம் மட்டும் அதிகம். அதைத் தவிர்த்துட்டு பார்த்தா இந்தப் படத்தை எந்த சிச்சுவேஷன்லயும் யார் வேணும்னாலும் பார்க்கலாம். சக மனுஷன் மேல அன்பு வைக்கிறது, உதவுறது, தகவல் பரிமாற்றம், ஒரு கிரிட்டிக்கல் சிச்சுவேஷன்-ல மனுஷன் எப்படியெல்லாம் மாறுவான் அப்படிங்கிற பல விஷயங்களை ஒரு ஜோம்பி படத்துல சொல்லியிருக்காங்க.
பாருங்க.

No comments :
Post a Comment