எழுதியவர் : யோகா தியாகு
தூரத்தில் கேட்ட காலடியோசைகளை கண்டு கலவரமாயினர் இருவரும்.ஒருவேளை அந்த கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்துவிட்டால் தங்களை கொன்று விடுவார்களோ என அஞ்சினர்.ஆனால் வந்தது மற்ற பெண்கள்தான் என அறிந்து மாலதியும்,சந்தியாவும் நிம்மதியாயினர்.
அங்கு வந்த மற்ற பெண்கள் வித்யா எனும் பெண், ரோபாவாக பிய்ந்து போய் கிடப்பதை கண்டு அதிர்ச்சி ஆயினர்.மேலும் நடுக்காட்டில் இருந்த கட்டிடத்தை கண்டு கலவரமானார்கள்.
அப்போது மாலதி அங்கிருந்த பெண்களிடம் "இது என்ன மாதிரியான டிசைன்,யாராச்சும் பாத்து சொல்ல முடியுமா" என பொதுவாக கேட்டாள்.
நான் பார்த்து சொல்கிறேன் என ராதிகா முன்வந்து ரோபோவை பிரித்துப் பார்த்தாள்.சிறிது நேரம் ஆராய்ந்தவள் திரும்பி "இது நம்மள மட்டும் கண்கானிக்க அனுப்பல,இது இங்கிருந்து வேற யாருக்கோ தகவல் கொடுத்துட்டு இருக்கு,இங்க இருக்கற சுற்றுப்புறங்கள் பத்தியும் கூட....சரியா சொல்லனும்னா இது இந்த கூட்டத்தை சேர்ந்த்து இல்லனு நெனைக்கறேன்" என விளக்க முற்பட்டாள்..
அதைக்கேட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்..இது இந்த கூட்டத்தை சேர்ந்ததாக இல்லையென்றால் வேறு யார் அனுப்பிருப்பார்கள்?.யாருக்கு தகவல் கொடுத்துக்கொண்டு இருந்திருக்கும் என குழப்பமடைந்தனர்.
அப்போது சந்தியா, "சரி அதுல அனுப்புன மெசேஜ் ஏதாச்சும் திரும்ப கிடைக்குமானு பாரு.." என கேட்க.
சரி பாக்கறேன் என சொல்லி விட்டு மீண்டும் ரோபாவை ஆராய்ந்த ராதிகா கண்கள் விரிய திரும்பி சொன்னாள்,."இங்கிருக்கும் பழுப்பு நிற பூக்கள் மட்டும்கேமரா கண்களுக்கு தெரிவதில்லை.அதற்கு பின்னால் இருப்பவற்றை சுவர் போல மறைத்து விடுகிறது"என மெசேஜ் உள்ளதாக கூறினாள்.
அனைவரும் ஏதோ வழி கிடைத்துவிட்டதைப் போல ஒருவரை ஒருவர் பார்த்து சந்தோஷப் பெருமூச்சு விட்டுக்கொண்டனர்..
----------------------------
----------------------------
கட்டிடத்திற்குள் இருந்த குறுந்தாடியும் இளைஞனும் கட்டிடத்தின் பின்னால் என்ன நடக்கிறது என புரியாமல் இருந்தனர்.
அந்த இளைஞன் "நாம வெளிய போய் பாக்கலாமா" என துப்பாக்கியைத் தூக்கியவாறு கேட்டான்.
உடனே குறுந்தாடி "அப்படியெல்லாம் டக்குனு வெளிய போக முடியாதுடா.போனா செத்துடுவ" என கூறினான்
"ஏன் ஏன் ஏன் எதுக்கு சாகனும்?எப்படி செத்துடுவேன்னு சொல்ற?" என்றான் இளைஞன்.
"இந்த கிரகத்துல நம்மள மாதிரி ஆளுங்க சாதாரணமா மூச்சு விட்டு வாழ முடியாது.வெளிய போனா ஆக்ஸிஜன் அளவு ரொம்ப கம்மி" என கூறினான்.
"அப்ப அந்த பொண்ணுங்க மட்டும் எப்படி வாழ்றாங்க?" என அதிர்ச்சியுடன் கேட்டான் இளைஞன்.
"அவங்க எல்லாரும் ஜி1 ப்ளட் குரூப்ப சேர்ந்தவங்க.மேபி அதனால கூட இருக்கலாம்" என சொல்லியபடியே தன குறுந்தாடியை மெல்ல சொறிந்தான் குறுந்தாடி.
"ஜி1 அப்படினு ப்ளட் குரூப்பா?அப்படினா?"
"சும்மா கேள்வி கேட்டுட்டு இருக்காத,உன் வேல அவங்கள வாட்ச் பண்றதும்,கேமராவ கன்ட்ரோல்ல வெச்சுக்கறதும் மட்டுந்தான்....அவங்கள புடிக்கனும்னா ஆக்ஸிஜன் சிலிண்டர் எடுத்துட்டு போலாம் வா"என கூறினான் குறுந்தாடி..
-------------------------
நிர்வாண உடலைக் கண்ட பாலகணேசன், "த்தா தே***பசங்க என்ன மோட்டிவ்காக கொலை பண்ணாங்கனு தெரியலயே" என்று கூறினான்.
அப்போது நையிரா கிசோகரிடம்," இது அந்த காணாம போன பொண்ணுங்கள்ள ஒருத்தியா இருக்குமோ?" என சந்தேகம் எழுப்பினாள்..
"தெரியல மொதல்ல எவிடன்ஸ் கலெக்ட் பண்ணிக்குவோம்" என தன வேலையில் மும்முரமாக இறங்கினான் கிசோகர்.
"சரி நாம டிடெக்டிவ்னு யாருக்கும் காட்டிக்காம முடிஞ்ச அளவு டீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணு" என்றாள் நையிரா
கிசோகர் பட்டன் கேமராவை தட்டினான்.அது பிரேத்தத்தை உள் வாங்கிக் கொண்டது.
"நா ஒரு தம் போட்டுட்டு வரேன்.." என சற்று தூரம் தள்ளி இருந்த கடைக்கு சென்று சிகரெட் வாங்கி பற்ற வைத்தான் கணேசன்..
அப்போது கடையில் ஆறடி உயரம் கொண்ட ஒருவன் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்த கணேசன் 'என்ன ஹைட்டுடா இவன்!!!' என கூறிக்கொண்டே மொபைலை எடுத்து can you escape?என்கிற மொபைல் கேமின் எட்டாம் லெவலை மீண்டும் விளையாட் ஆரம்பித்தான்."சே இந்த லெவல் கம்ப்ளீட் பண்ணவே முடியலயே.. அடுத்த க்ளூ எங்கிருக்குனு தெரியலயே" என தனக்குள் புலம்பியபடி கேமை தொடர்ந்தான்..
அப்போது அந்த ஆறடி உயரம் கொண்ட ஆன்டோவின் உதடுகள் பிரேதத்திடம் இருந்த கூட்டத்தை பார்த்து கீழ்க்கண்டவாறு முணுமுணுத்தன.
"பெரிய அறிவாளி மயிரு.என்னையே ஏமாத்தறாளா.....சாவுடி"
---------------------
"வேற ஏதாச்சும் மெசேஜ் கெடைக்குமானு சீக்கிரம் பாருடி" என கூறினாள் மாலதி.
"இல்ல எல்லா மெசேஜும் அனுப்புன அஞ்சாவது நிமிசம் ஆட்டோமேடிக்கா டெலிட் ஆகற மாதிரி செட் பண்ணிருக்காங்க.இந்த மெசேஜும் இன்னும் ஒரு நிமிசத்துல அழிஞ்சிடும்" என ராதிகா விலக்கினாள்.
அப்போது காட்டுக்குள் மீண்டும் காலடியோசைகள் கேட்டது..
மீண்டும் கலவரமான பெண்கள் ஒருமித்த குரலில்
"இப்ப என்ன பண்றது"? என சந்தியாவிடம் கேட்டனர்.
"இப்ப என்ன பண்றது"? என சந்தியாவிடம் கேட்டனர்.
"நாம ஏதாச்சும் எடத்துல போய் இப்போதைக்கு ஒளிஞ்சிக்குவோம்.அப்பறம் அந்த பழுப்பு நிற பூக்கள வெச்சு கேமராகிட்ட இருந்து தப்பிக்கலாம்" என அவள் கூறினாள்.
"சரி இந்த ரோபோவ என்ன பண்றது?"என வினவினாள் ராதிகா..
"அத இங்கயே போட்டுடு.. அவங்க வந்து பாக்கட்டும்.அவங்க தகவல்கள் வேற எங்கயோ பாஸாயிட்டு இருக்குனு தெரிஞ்சா நம்ம மேல இருக்கற கவனம் அதுமேல கொஞ்சம் டைவர்ட் ஆகும்.அத நாம யூஸ் பண்ணிக்கலாம்" என மாலதி கூறினாள்..
அனைவருக்கும் அது சரியெனப் படவே எல்லாரும் அங்கிருந்து ஓடி பெரிய மரத்தின் பின்னால் இருந்த ஒரு பெரிய புதரின் பின்னால் ஒளிந்து கொண்டனர்.
ஆக்ஸிஜன் சிலிண்டர் கட்டிக் கொண்டு வந்த குறுந்தாடியும்,இளைஞனும் துப்பாக்கி சகிதம் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
இவர்கள் ஏன் ஆக்ஸிஜன் சிலிண்டர் கட்டி வருகின்றனர்.சிலிண்டர் இல்லைஎன்றால் இவர்களால் இங்க மூச்சு விட முடியாதா?அப்படி என்றால் நாம் மட்டும் எப்படி உயிரோடு இருக்கிறோம்? என மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த மாலதியும்,சந்தியாவும் குழப்பமாய் பார்த்து தங்களுக்குள் கேட்டுக்கொண்டனர்.
தரையில் ஏதோ பெண் இறந்து கிடக்கிறாள் என அருகில் வந்த இருவரும் அது பெண் அல்ல ரோபோ என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இது எப்படி சாத்தியம்!!!
"ஒரு ரோபோ எப்படி பொண்ணா இவளுங்க கூட வர முடியும்?" என கேட்டான் இளைஞன்.
"தெரியலையே.. இதுல ஏதோ தப்பிருக்கற மாதிரி தெரியுது.உடனே சீனியர்க்கு இன்ஃபார்ம் பண்ணிடனும்"என பதட்டத்துடன் மொபைல் போன்ற ஒரு சாதனத்தை எடுத்து சீனியரை அழைத்தான்..
"சார் ஒரு சின்ன தப்பு நடந்துருச்சு" என்றான் குறுந்தாடி
"ஏன் என்ன ஆச்சு?" என கம்ப்யூட்டரில் அமௌண்ட் ட்ரான்சாக்ஷன்களை சரி பார்த்துக் கொண்டிருந்த சீனியர் கேட்டார்.
"சார் வித்யா பொண்ணே இல்ல சார்.அது ரோபோ.."என்றான் குறுந்தாடி..
"சரி விடு அந்த வித்யாவே இப்ப உயிரோட இல்ல..." என கதவைத் திறந்து வந்து கொண்டிருந்த ஆன்டோவைப் பார்த்து சிரித்தபடியே சொன்னார் சீனியர்.
உண்மையாவே வித்யா உயிரோட இல்லை என்பதை கேள்விப்பட்ட அதிர்ச்சியான குறுந்தாடி, "சார் அதுமட்டுமில்ல இங்கிருந்து தகவல்கள் வேற யாருக்கோ பாஸாயிருக்கு சார்" என கம்மிய குரலில் சொன்னான்.
இதைக்கேட்ட சீனியர் முகம் இப்போது மாறியது."வாட்?என்ன சொல்ற?"என அதிரச்சியுடன் கேட்டார்..
"ஆமா சார் ஏதோ மெசேஜ் பாஸாயிருக்குனு நெனைக்கறேன்.ஆனா இப்ப எதுவும் காட்ட மாட்டேங்குது" என்றான்.
"சரி அந்த ரோபோவ லேப்ல எடுத்துட்டுப் போய் வை.நா நாளைக்கு கிரகத்துக்கு வந்து பாக்கறேன்" என்று நெற்றியில் வழிந்த வியர்வையை துடைத்தபடி சொன்னார் சீனியர்.
அந்த மொபைலை ஆப் செய்துவிட்டு கீழே கிடந்த ரோபோவை எடுத்துக் கொண்டு மீண்டும் ஒரு முறை காட்டைத் திரும்பி பார்த்து விட்டு கட்டிடத்தை நோக்கி நடந்தனர் இருவரும்..
இப்போது மாலதிக்கும்,சந்தியாவுக்கும் ஆயிரம் கேள்விகள் முன்வந்து நின்றன.
"நம்மளாள மட்டும் எப்படி ஆக்ஸிஜன் இல்லாம மூச்சு விட முடியுது?இவங்க கெட்டவங்கன்னா அப்போ ரோபோ அனுப்புனது யாரு?இது கேமா இருந்தா இவங்களோட எதிரிங்க ஒரு ரோபோவ வேவு பாக்க ஏன் அனுப்பனும்?யாரந்த சீனியர்?அந்த பழுப்புநிறப் பூக்கள வெச்சு தப்பிக்க முடியுமா?" என பெருத்த குழப்பத்தோடு ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர்.
-------------
சீனியர் அறையில்..
சீனியர் அறையில்..
சீனியர் ஆன்டோவைப் பார்த்து "ஆன்டோ நம்ம க்ரூக்ஸ் கிரக தகவல்கள் வித்யா ரோபோ மூலமா வெளிய லீக் ஆயிருக்கு" என சொன்னார்..
ஆன்டோ "அப்ப வித்யா சம்பந்தபட்டவங்கதான் யாராச்சும் இருக்கும்.தேடிப் போய் போட்டுடறேன்" என சிரித்தபடியே சொன்னான்..
"சரி சார் அமௌண்ட் வந்துடுச்சா?" என ஆன்டோ கேட்க,"ம்ம்ம் வந்துடுச்சு மாலனி செத்ததுக்கு 500கோடி ட்ரான்ஸ்பர் ஆயிருக்கு "என்றார் சீனியர்.
"ஆனா நாம மாலினிய கொன்னுருக்க வேணாமே சார் இன்னும் கொஞ்ச நாள் நம்ம ஆராய்ச்சிக்கு யூஸ் ஆயிருப்பாளே" என்றான் ஆன்டோ.
"எனக்கு அவங்கள கொல்லனுங்கறது நோக்கமில்ல ஆன்டோ. ஆனா என் ஆராய்ச்சிக்காக அவங்கள கொல்றது தப்பே இல்ல..நா வேற்று கிரகத்த பத்தி ஆராய்ச்சி பண்ணனும்னு பணம் கேட்டா எவன் தர்றான்?அதான் மனுசங்கள வெச்சு டெத் கேம்னு அனௌன்ஸ் பண்ணேன்.உடனே எல்லா பணக்காரங்களும் பணத்த கொண்டு வந்து கொட்டுனாங்களே..தோ மாலினி செத்த உடனே 500கோடி ட்ரான்ஸ்பர் ஆயிருக்கு பாத்தியா!அவனுங்கள பொறுத்த வரைக்கும் இது ஒரு கேம்.ஆனா இது கேம்ங்கற பேர்ல நா நடத்தற ஆராய்ச்சி..இந்த ஆராய்ச்சிக்காகவே பொண்ணுங்கள செலக்ட் பண்ணி,டோட்டலா எல்லாருக்கும் ஜி1 ப்ளட் குரூப்பா மாத்தி அவங்களுக்கு சரியான வயசு வர்ற வரைக்கும் வெய்ட் பண்ணி இப்ப எல்லாரையும் களம் எறக்கிருக்கேன்..நெனச்சுப் பாரு புது கிரகம்.. நா தலைவன்.. நீ என் தளபதி.அங்க வாழனும்னா எல்லாரும் எல்லாரும், எவ்ளோ பெரிய ஆளா இருந்தாலும் என் கால்ல வந்து விழணும்.ராஜ போதை அது.." என கண்கள் மூடி தன கற்பனையை தானே அனுபவித்தார் சீனியர்.
அதைப்பார்த்து வஞ்சகமாக சிரித்துக் கொண்டிருந்தான் ஆண்டோ...
(தொடரும்)
உரலிகள் :-
No comments :
Post a Comment