Wednesday, September 23, 2015

நரகம் 2 கி.மீ - மூன்றாவது அத்தியாயம்

எழுதியவர் : சரண் குமார்

சரி லெவல் 1 ஆரம்பிக்கலாம்” குறுந்தாடி தனது கம்ப்யூட்டர் திரையில் தெரிந்த லெவல் பட்டனை அழுத்திக் கொண்டே சொன்னான் .
“இந்த லெவல்லயே பாதி பேர் முடிஞ்சிடுவாங்க” என்றான் அருகிலிருந்தவன்.
………………………………………………………………………….
அந்த அடர்ர்ந்த காடுகளை சுற்றி பார்த்தப்படி ஒரு வித பயத்துடன் ஒவ்வொரு அடியையும் பார்த்து வைத்துக் கொண்டிருந்த பெண்களுக்கு எந்த இடம் இப்பொழுது அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது மட்டுமே உடனடி தேவையாக இருந்திருக்க வேண்டும். சற்று தூரத்தில் தெரிந்த ஒரு பாறை தங்களுக்கு பாதுகாப்பா இல்லை ஆபத்தின் ஆரம்பமா என்பதில் அவர்கள் குழம்பி போயிருந்தார்கள். இந்த பயம் அவர்களை அடர்ந்த காடுகளைப் போல் சூழ்ந்துக் கொள்ள அவர்கள் அந்த பாறையை நெருங்க தயங்கினார்கள்.
மாலதி மட்டும் வெகு தூரத்தில் இருக்கும் இரு மலையையும் அதன் பின்னால் மறைந்துக் கொண்டிருக்கும் சூரியனையும் அந்த சூரியனை இப்பொழுதே மறைத்துக்கொண்டிருக்கும் சிவந்த மேகங்களையும பார்த்துக்கொண்டிருந்தாள். சற்றே வித்யாசமாக தோன்றிய இந்த உலகத்தின் புவிவியலை அவள் உணர்ந்துக் கொண்டிருந்தாள். அவர்கள் சுற்றி பல அடர்ந்த மரங்கள் இருந்தாலும் அவற்றின் இலைகள் அனைத்தும் ரத்தச் சிவப்பு நிறத்திலும், மற்ற பாகங்கள் கரும் நிறத்திலும் வெளிப்படுத்தியதை மீண்டும் மீண்டும் பார்த்தாள். அந்த மரங்கள் அனைத்தின் உயரமும் ஒரு சிறு குன்று போல் இருந்ததால் இந்த உலகத்தில் மிகப் பெரிய உயிரனங்களும், அந்த உயிரனங்களும் இம்மரங்கள் அனைத்தும் மிக உஸ்னமான கார்பெண்டையாக்ஸைடை வெளியேற்றும் என்பதால் இங்கே பகல் மிகவும் உஸ்னமாக இருக்க வேண்டும் என்று யூகித்தாள். அப்பொழுது அந்த மறையும் சூரியனின் காட்சி இந்த சூழ்நிலையிலும் அவளுக்கு நிம்மதியை தந்தது.
மாலதி அவ்வாறு நினைத்துக் கொண்டே நடந்துக் கொண்டிருக்கும் போது முன்னால் சென்றுக் கொண்டிருக்கும் ஒரு பெண்ணை அவள் இடித்துக் கொண்டு நின்றாள். அப்பொழுது தான் மாலதி, பெண்கள் அனைவரும் முன்னோக்கி செல்வதை நிறுத்திக் கொண்டார்கள் என்பதை உணர்ந்தாள்.
“ஏன் நடக்கிறதை நிறுத்திட்டீங்க”, வித்யா முழங்கினாள்.
“அந்த இடத்துக்கு போகிறது எப்படி நமக்கு பாதுகாப்பா இருக்கும்னு நீ நினைக்கிற”, என சந்தியா அவளது சத்தம் அவளுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது போல் கத்தினாள்.
”ரெண்டு பேரும் பேசாம இருங்க, நாம இப்போ அந்த பாறைக்கு பின்னாடி போகனுமா இல்லை போக்கூடாதாங்கிறதை சீக்கிரம் முடிவு பன்னுங்க இன்னும் கொஞ்ச நேரத்துல சூரியன் மறைஞ்சி இருள் சூழப் போகுது”, மாலதி பேசிக்கொண்டே ஒரு மலையடிவாரத்தில் மறைந்துக் கொண்டிருக்கும் சிவப்பான சூரியனைக் காட்டினாள்.
மாலதியின் எச்சரிக்கை அனைத்து பெண்களுக்கும் கிலி ஏற்படுத்திருக்க வேண்டும் அவர்கள் தங்கள் அருகில் இருப்பவர்களிடம் முனங்கிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.சந்தியா இப்பொழுது மாலதி அருகில் வந்தாள்,
”இவ சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்கு” என்று சொல்லிக்கொண்டே சந்தியா “எதுக்காக அந்தப் பாறைக்கு பின்னாடி போகனும்னு நீ சொல்ற” என்று வித்யாவிடம் வினவினாள்.
“ நீங்க எப்படினு எனக்கு தெரியாது ஆனா நான் சின்ன வயசிலிருந்து காட்டுல வாழ்ந்தவ, எங்கப்பா ஒரு ரேஞ்சர், காட்டுக்குள்ள இருக்கிற ஆபத்துகளை விட ஒரு குகைக்குள்ள இருக்கிற ஆபத்துகளை சமாளிக்கிறது சுலபம், அந்த பாறையைப் பார்த்த அதோட பின் பகுதில பெரிய குகை ஒன்னு இருக்கனும்னு நினைக்கிறேன் இது தான் நாம இன்னைக்கு இரவை பாதுக்காப்பா இருக்குறதுக்கு உதவும்”, வித்யா பேசிக்கொண்டிருக்கு போதே அவள் அருகில் இருந்த பல பெண்களுக்கு அவள் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கை உருவானது. அவர்கள் அனைவரும் இப்பொழுது வித்யா பின்னாடி நிற்கத் தொடங்கினர்.
“ எல்லாரோட உயிரையும் உன் ஒருத்தியோட முடிவுக்கு விட்டுட முடியாது, இந்தக் காட்டைக் கடந்து நாம போகுறது தான் நமக்கு நல்லதா இருக்கனும்”, சந்தியா தெளிவாக சொன்னாள்.
“சரி சரி , அப்ப இந்த இடத்தோட நாம இரண்டா பிரிய வேண்டிய நேரம் வந்திருச்சு, யாருக்கெல்லாம பாதுகாப்பு வேண்டுமோ அவுங்க என் பின்னாடி வரட்டும்,மத்தவங்க அவ கூட இங்கயே கிடந்து சாவுங்க”, வித்யாவுக்கு இருந்த ஒரு ஆசிரியரின் கண்டிப்பு குரல் பலரை ஈர்க்க அவள் பின்னால் பலர் சென்றார்கள்.
போகலாமா வேண்டாமா என்று மாலதி யோசித்துக் கொண்டிருக்கும் வேளையில் சந்தியாவின் கைகள் அவளது கைகளை பிடித்து நிறுத்தியது.
சற்றும் யோசிக்காமல் வித்யா அவளது குழுவை அந்த பாறையை நோக்கி அழைத்து சென்றாள்.
வித்யாவிக்கு பின்னால் போனவர்களை தவிர இப்பொழுது எங்கள் குழுவில் வெறும் நான்கு பேர்கள் தான் இருந்தோம்.
“ஏன் என் கையை பிடிச்சு தடுத்த?”, மாலதி சற்று தன் குரலை உயர்த்தி சந்தியாவிடம் கேட்டாள்.
“உனக்கு புரியலையா”
“என்ன புரியனும்”
“இது எல்லாம் ஒரு கேம் போல உனக்கு தெரியலையா, ஒரு கேம்ல ஒரு ஆள் தான்
ஜெயிக்க முடியும்னு இல்லை ஒரு ஆள் தான் உயிரோட இருக்க முடியும். இங்க பாதுக்காப்புன்னு ஒன்னு கிடையாது.. அப்படி ஒன்னு தெரியுதுனா அதுக்கு பின்னாடி தான் பெரும் ஆபத்து இருக்கும், ஈஸியா வாழ்க்கை அமைய போறது இல்லைங்கிறதை நாம கடத்தப்பட்டபோதே உணர்ந்தாச்சில்லயா, எந்த பக்கம் ஆபத்து அதிகமோ அங்கே தான் நம்ம விடுதலையும் இருக்கு”.
கடத்தப்பட்ட என்ற வார்த்தையை கேட்டவுடன் தான் மாலதிக்கு தனது பழைய ஞாபகங்கள் மீண்டும் வர ஆரம்பித்த்து, அந்த தனியறையில் தனக்கு ஏற்பட்ட விசயங்களையும் தனது நிர்வாண உடலை அவள் பார்த்து அவளுக்கு ஒரு வித அருவருப்பான எண்ணங்கள் ஓட ஆரம்பித்தது. ஒரு வேளை இதில் நான் உயிரோடு வெளியேறினாள் இதற்கெல்லாம காரணமான அந்த ஆண்ட் ஐ உயிரோடு தோலை உரிக்க வேண்டும் என்றும் யோசித்துக் கொண்டிருந்தாள்.
”ஐ ஆம் சந்தியா ,உன் பேரு”
“மாலதி, ஒரு காமெடி தெரியுமா சந்தியா”
“என்னது”
“இன்னைக்கு என்னோட 24 ஆவது பிறந்த நாள்”
“வாட் என்ன சொல்ல்ற நீ கட்த்தப்பட்டபோ உனக்கு 24 வயசா”
“ஆமா, ஏன்?”, குழப்பமாக கேட்டாள் மாலதி.
“ நானும் என்னோட 24ஆவது பிறந்த நாள் அன்னைக்கு தான் கடத்தப்பட்டேன்” என்று
சந்தியா சொல்லிக்கொண்டிருக்கும் போதே பக்கத்திலிருந்த இரண்டு பெண்களும் இந்த விசயம் தங்களுக்கும் ஒத்துப் போவதாக சொன்னார்கள். இது எங்கள் அனைவருக்கும் ஒரு வித கிலியை கொடுக்க அனைவரும் பேச்சு மூச்சில்லாமல் யோசனையில் ஆழ்ந்தனர்.
பயம் அவர்களை கொண்றுவிடுவது போல் சூழ்ந்துக் கொண்டது.என்ன செய்ய போகிறோம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது மாலதியின் உடல் எரிய ஆரம்பிக்க அவள் மீண்டும் நிஜத்துக்கு திரும்பி வந்தாள். சுற்றி உள்ள அணைவரும் இதே போல் உணர்வதை அவர்களின் கண்கள் மூலம் உணர்ந்துக்கொண்டாள்.
“அங்கே பாரு “ என்று ஒருத்தி தன் கண்களை மூடிக்கொண்டு அவர்கள் இருக்கும் திசைக்கு பின்னால் காட்டினாள்.
அவள் காட்டிய திசையில் வெள்ளி நிறத்தில் ஒரு மிகப்பெரிய சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது.
“இனி தான் பகல் ஆரம்பமாகப் போகுது” என்றாள் சந்தியா கலவரத்துடன்.
...................................................
"சூரியனே இப்ப இங்க நம்ம கண்ட்ரோல்லதான் இருக்கு.. ஹா ஹா ஹா..." என மானிட்டரை பார்த்துக்கொண்டே இருவரும் தொடர்ந்து சிரிக்க தொடங்கினார்கள் .
தொடரும்.

உரலிகள் :-

No comments :

Post a Comment