எழுதியவர் : பால கணேசன்
இவ்வளவு ஒரு அடர்ந்த காடை தன் வாழ்நாளில் மாலதி கண்டதில்லை. மற்ற பெண்களும் பார்த்திருக்க வாய்ப்பில்லை என அவள் யூகித்தாள்.கண்களுக்கு தெரிந்த மரங்கள் எல்லாம் அவள் வாழ்நாளில் கண்டதுமில்லை. கேள்விப்பட்டதுமில்லை. இலைகள் எல்லாம் ரத்தச் சிவப்பில் இருக்க, கிளைகளும், தண்டுகளும் கன்னங்கரேலென்று இருந்தன. அந்த மரங்களைப் பார்க்கும்போதே ஒரு பயம் உள்ளே தோன்ற ஆரமபித்தது.
"ஹலோ... யாராவது இருக்கீங்களா?" - பத்துபேரில் யாரோ ஒருத்தி அடிவயிற்றில் இருந்து குரல் எழுப்பி கத்தினாள். இந்த கத்தலுக்கு பூமியாய் இருந்திருந்தால் மரங்களில் இருந்து பறவைகள் படபடவென சிறகை விரித்து வான் நோக்கி பறந்திருக்கும். ஆனால் இங்கே மரங்கள் அசையக்கூட இல்லை. அதே பேரமைதி.அந்த பேரமைதி தந்த அதே பயம். உள்ளுக்குள் ஊடுருவி உயிரை ரணமாக்கும் பயம்.
இப்போது இன்னும் இரண்டு மூன்று பெண்கள் ஒன்றாய் சேர்ந்து ஒரே நேரத்தில் ," ஹெல்ப்..ஹெல்ப்.." என கத்த ஆரம்பிக்க இதனால் ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என மாலதி இன்னும் பயப்பட தொடங்கினாள்.
"ஷட் அப் யூ ஃபூல்ஸ்.. முதல்ல இது என்ன இடம்.. இங்க என்னவெல்லாம் இருக்குன்னு பார்த்துட்டு அப்புறமா கத்தலாம். நீங்க கத்துரதாலையே எதாவது ஆபத்து வந்துட்டா? முதல்ல இந்த ஓபன் ப்ளேஸ விட்டு விலகுவோம். அப்புறமா பேசலாம்.." - ஒரு வகுப்பில் கம்பீரமாய் ஒலிக்கும் ஒரு ஆசிரியரின் குரலைப்போல் ஒலித்த அந்த குரலுக்கு உடனே பெண்கள் அனைவரும் கட்டுப்பட்டனர்.
"பை தி பை.. நான் வித்யா. ஒரு ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன். இருந்தேன்னு கூட சொல்லலாம். இல்லையா? தோணிச்சின்னா உங்க பேரை சொல்லலாம்.." - என்றுவிட்டு முன்னால் நடக்க ஆரம்பித்தாள்.
..........................................
..........................................
அந்த இடத்திலிருந்து இரண்டு கிமீ தூரத்தில் இருந்த ஒரு மிக பிரம்மாண்டமான மாளிகையின் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான அறைகளில் இருபத்தி நான்காம் எண் அறைக்குள் அமைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான மானிட்டர்களில் ஒரு ஓரத்தில் இருந்த மானிட்டரில் அந்த பெண்கள் நிர்வாணமாய் நடந்து போவதை நான்கு கண்கள் கவனித்துக்கொண்டிருந்தன. ஒரு சொல்லவொண்ணா மகிழ்ச்சி அந்த கண்களில் தெரிந்தது. எதையோ சாதித்த திருப்தி. அதேநேரத்தில் அடுத்து என்னென்ன நிகழப் போகிறது என்பதை அறிந்துகொள்ள ஆர்வமாய் இருக்கும் ஒரு குறுகுறுப்பு. இதழ்களில் மெல்லிய சிரிப்பு.
தன் மெல்லிய குறுந்தாடியை தடவியவாறு 45 வயது மதிக்கத்தக்க அந்த மனிதர் தன் நாற்காலியில் இருந்து எழுந்தார். அருகிலிருந்த மேசையில் ஒரு மடிக்கணினி அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. அதை எழுப்பினார். அதற்காகவே காத்துக்கொண்டிருந்தது போல அந்த மடிக்கணினி துள்ளிக் குதித்து எழுந்து தன்னுள் இருந்த ப்ரோக்ராம்-களை கடகடவென கொட்ட ஆரம்பித்தது. நான்கு நிமிடங்களில் நிதானத்திற்கு வந்த மடிக்கணினி மெல்ல மூச்சுவிட்டவாறே ஒரு இணையதளத்தை திறந்தது. அதை மேலும் பார்க்க கடவுச்சொல் கேட்டது. TwEnTyFoUr24 என குறுந்தாடி தட்டச்ச, அந்த இமேஜ் படாரென திரையில் தோன்றியது.
Game Begins at 24 Seconds.... - என்கிற வார்த்தைகளுக்கு கீழே குரங்கு போன்ற உருவமுடைய ஆனால் கண்கள் மட்டும் ஒரு பூனைக்கு உரியது போன்ற உருவம் ஒன்று அந்த இமேஜில் இருந்தது. அந்த இமேஜிற்கு கீழே இருந்த Activate என்கிற ஆப்ஷனை க்ளிக்கினார்.
...................................
யாருமே வாய் திறக்கவே இல்லை. பெயரும் சொல்லவில்லை. அதைப்பற்றியெல்லாம் வித்யா கவலைப்பட்டதாக தோன்றவில்லை. காட்டுக்குள்ளே போகக்கூடாது என்பதில் மட்டும் உறுதியாய் இருந்தவளாய் காணப்பட்டாள். ஆட்டு மந்தை போல பெண்கள் பின்தொடர்ந்தனர் அவளை. மாலதிக்கு முதலில் மற்ற பெண்களின் நிர்வாணம் மிகவும் அருவருப்பாய் இருந்தது. ஆனால் இந்த பத்து நிமிடங்களில் பழகிவிட்டிருந்தாள். தானும் அவ்வாறே இருக்கிறோம் என்பதை உணர்ந்திருப்பாள் போலும்!
பாதை மிக சிரமமாக இருந்தது. கற்கள் பச்சை நிறத்தில் இருந்தன. ஆனால் முனை மழுங்கியே இருந்தது. வெற்றுக் கால்களில் நடந்து பழக்கமில்லாததால் பெண்கள் கஷ்டப்படுவது தெளிவாய் புரிந்தது. வித்யா ஏதேனும் குகை போல தென்படுமா என்பதை மட்டும் தேடிக்கொண்டிருந்தாள். காட்டின் பக்கம் திரும்பிப்பார்த்தாலே பயமாக இருந்தது. சற்று தூரத்தில் ஒரு மிகப்பெரிய பாறை கண்களில் தென்பட அதை நோக்கி வேக வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.
அந்த பாறைக்கு பின்னே 24 பூனைக் கண் குரங்குகள் அணிவகுத்து நின்றுகொண்டிருந்ததை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவைகள் துரத்தினால் காட்டுக்குள் ஓடித்தான் தப்பித்தாக வேண்டும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
...................
" கடைசி வரை உயிரோடிருக்கப் போவது வித்யாதான்.." என்றான் அருகில் இருந்தவன்.
"இல்லை.. இல்லை.. அந்த கறுப்புப் பேரழகி சந்தியாதான்.." - என்றார் குறுந்தாடி.
(தொடரும்)
உரலிகள் :-
No comments :
Post a Comment