எழுதியவர் : வாசகர் ஹாரி
1991 ஆகஸ்ட் 24 அதிகாலை 00 : 24
இரவின் நிசப்தம் வைத்தியசாலை அறைகள் முழுவதும் விரவி இருந்தது. வெள்ளை போர்ட் ஒன்றில் "சீனியர் வைத்தியசாலை" என்று பெயிண்ட் அடிக்கப்பட்டு இருந்தது. ஒரு இரவிற்கு காய வைத்து இருந்தார்கள்.
மணிக்கூண்டை சரி செய்து கொண்டே "சீனி'வாசன் வாண்டை'யர்" வைத்தியசாலைக்குள் வேகமாக நுழைந்தார். டாக்டர்.ருபெல்லோ கண்ணாடி போட்டு கொண்டு வெளியேறவும் டாக்டர்.சீனிவாசன் வாண்டையர் நுழையவும் சரியாக இருந்தது.
"குட் மார்னிங் டாக்டர்". ருபெல்லோ
பதில் வணக்கம் ஏதும் இல்லாமல் "எத்தனை குழந்தைங்க".
''பத்து"
"பத்தா?. பன்னிரண்டுல டார்கெட்."
"ஆமா டாக்டர். ஆனா இரண்டு பொண்ணுங்க வலி தாங்க முடியாம நேத்தே டெலிவர் பண்ணிடிச்சுங்க"
"ஹோலி ஷிட்.. இன்னைக்கு பத்து குழந்தைங்களும் பிறந்தாகனும். டோன்ட் மிஸ் இட்."
"சுர் டாக்டர். அதுல சேஞ்சஸ் வராது. "
"அப்புறம் நான் சொன்னது மாதிரியே, ஹாஸ்பிட்டல்ல ஃபயர் ஆக்ஸிடன்ட் மாதிரி கிரியேட் பண்ணிடு. குழந்தைங்க செத்தது போல நியுஸ் ஸ்ப்ரெட் ஆகட்டும். மீடியா நான் பார்த்துக்குறேன்"
"கண்டிப்பா டாக்டர்.. ஆனா..."
"ஆனா"
"இது எனக்கு புரியல டாக்டர். இந்த ரிஸ்க் தேவையா? குழந்தைங்க. பேரன்ட்ஸ் கூட இருந்தா நமக்கு வாச்சபிளா இருக்குமே, அநாதை ஆசிரமம். குழந்தைங்க தனியா வளர்றது ரிஸ்க் இல்லையா?"
"யூ ஆஸ்.. புரிஞ்சுதான் பேசுறியா?? நான் சொல்லுறதை முதல்ல செய்" கோபமாக சீனிவாசன் வாண்டையர் வெளியேறினார்.
--------------------------------------------------------------------------------------
1997 ஆகஸ்ட் 24 அதிகாலை 06 : 24
--------------------------------------------------------------------------------------
1997 ஆகஸ்ட் 24 அதிகாலை 06 : 24
ஆறு மணிக்கு அடித்த அலாரமிற்கு, கண்கள் 24 நிமிடங்கள் கழித்தே மறுமொழி புரிந்தது. செயற்கை அழைப்புக்கு விழி விழிக்கா விடினும் இயற்கை அழைப்பு விழிக்க செய்தது.
Phd டாக்டரேட் வாங்கிய பெருமிதம் எழுந்தவுடனே கட்டிலின் நேரே போட்டோ பிரேமாய் விரிந்தது. கட்டிலில், அருகில் மனைவி. வாளிப்பான பின் முதுகு பளிங்காய் தெரிந்தது.. ம்ம்.. இயற்கை அழைப்புக்கு முன்னால் மனைவியின் நிர்வாண முதுகு கூட தோற்று போனது.
கட்டிலில் கிடந்த போர்வையை இடுப்புக்கு உடுத்தி கொண்டே டாக்டர் அன் விஞ்ஞானி யோகானந்த தியாகராஜன் வாஸ் ரூமை நோக்கி ஓடினார்.
"டிரிங் டிரிங்''
கட்டிலில் படுத்து கிடந்தவள் தூக்கினாள்.
"ஹெலோ"
"ஹெலோ.. மே ஐ ஸ்பீக் வித் டாக்டர். யோகானந்த் தியாகராஜன்"
"யா.. வன் செக்கன்........"
ரிசிவரை வைத்து விட்டு "தியாகு ... தியா..."
"யெஸ்.. யெஸ்.. சொல்லு டியர்" பாத்ரூமுக்குள் இருந்து வந்த சத்தம் முக்கலும், முனகலுமாய் வெளியே வந்து விழுந்தது.
"கால் பார் யூ"
"ஐ வில் கால் ஹிம் ஆர் ஹெர் லேட்டர் . பெயர், நம்பர் விசாரிச்சு வை" மனைவியின் முதுகால் முடியாதது ஜஸ்ட் போன் கால் செய்து விடுமா?. இயற்கை அழைப்பு அமைதியாக முடிந்தது.
"ஹெலோ கார்த்திக்.. ஐ ஆம் டாக்டர் யோகானந்த் தியாகராஜன்"
"டாக்டர் நேற்று உங்க லெக்சர் பற்றி தான் விசாரிக்கலாம்னு"
"ஓகே ஆஸ்க்.."
"நீங்க இன்னொரு உலகம் இருக்கலாம்னு பேசுனதை என்னால ஏற்று கொள்ள முடியலை.. இன்னொரு உலகம் பாசிபிள்ளா?. அப்படின்னா இன்னைக்கு வரைக்கும் நிலாவுக்கு போன நம்மலாள ஏன் அதை, அந்த புது உலகத்தை ரீச் பண்ண முடியல?"
"இன்னொரு உலகம் இல்லை.. இன்னும் பல உலகங்கள் கூட சாத்தியம் கார்த்திக். எப்படின்னா...... ம்ம்ம்ம்... ஈசியா சொல்லனும்னா ஒரு உலகம் ஆக்டிவா இருக்குன்னா அதோட பிரதிபலிப்பு இன்னொரு கிரகங்களுக்கு நிச்சயம் கடத்தப்படும். இப்போ நம்ம நிலாவுக்கு போனது. செவ்வாய்க்கு விண்கலம் அனுப்புறது எல்லாமே அந்த கேட்டகரி தான். நம்ம ஆக்டிவா இருக்குறதனால நம்ம பிரதிபலிப்பு இன்னொரு கிரகத்துக்கோ, உப கிரகத்துக்கோ கடத்த படுது.. அதே நேரம் இன்னைக்கு வரைக்கும் நம்ம பார்க்க முடியலைன்னாலும் ஏலியன்ஸ் பற்றி நம்பிக்கிட்டு தான் பேசிக்கிட்டு தான் இருக்கோம். காரணம் க்ராப் சர்க்கிள் போன்ற அதுங்களோட வெளிப்பாடு.
சிறு இடைவெளி இட்டு
"மே பீ அதுங்க இல்லாமல் கூட இருக்கலாம்"
"அப்போ இன்னொரு உலகம் இருக்கு என்று நம்புறீங்களா??"
"இல்லை. உறுதியா சொல்றேன். இன்னொரு உலகம் மட்டுமில்லை. மே பீ அந்த உலகத்துக்கும் இந்த உலகத்துக்கும் இடையில நிறைய நாளாவே தொடர்பும் இருந்து வரலாம்.. இப்பவும் தொடர்ந்து கொண்டு இருக்கலாம்"
----------------------------------------------------------------------------------
2015 செப்டெம்பர் 12 இரவு 09 : 12
----------------------------------------------------------------------------------
2015 செப்டெம்பர் 12 இரவு 09 : 12
கத்தார் கணேசனின் அறை சிகரெட் புகையால் மூழ்கி இருந்தது. காற்று புகும் வாசல் எல்லாம் அடைபட்டு மீடியம் பட்ஜெட் சாமியார் போல கத்தார் கணேசன் கட்டிலில் படுத்து கிடந்தான் . அறையை விவரிக்கும் அளவிற்கு புகைக்குள் ஏதும் தெரியவில்லை.
கதவு வாசலில் கணேசனை செயின் ஸ்மோக்கர் என்னுமளவிற்கு சிகரட் பெட்டிகள் வரிசைக்கு கிடந்தன. இந்த கதையின் படி எண்ணினால் இருபத்து நான்கு வரும்.
யாரோ ஒருவரின் கையால் கணேசனின் அறைக்கதவு ஓங்கி அறையப்பட்டு கொண்டு இருந்தது. கணேசனுக்கு அது கொஞ்சம் சத்தமான டெம்போவுடன் கூடிய பீட்டாக தோன்றியதால் அதை ரசித்து கொண்டே படுத்தான். இப்பொழுது கொஞ்சம் பீட் மாற துவங்கியது.
எழுந்து கதவை திறந்தான்..
"ஏன் யா இவ்வளவு நேரம்?"
"தூங்கிட்டேன் டா.."
"நல்லா தூங்கின போ.. ஆபிஸ் பக்கம் வர்ற ஐடியா இல்லையா" கேட்டு கொண்டே செயின் ஸ்மோக்கிங்கிலே தன்னையும் ஒரு சங்கிலித்துண்டு ஆக்கினான் அறைக்கதவை அறைந்த கிஷோகர்.
"இதான் என் ஆபிஸ். (லாப்டாப்பை காட்டி) இது தான் மொதலாளி. பேஸ்புக்ல தான் எனக்கு வேலை" பேசிக்கொண்டே லாப்டாப்பை தட்ட துவங்கினான்.
"என்ன சரக்கா? புதுசா ஒரு கேஸ்.. கேள்வி பட்டியா? பன்னிரெண்டு பொண்ணுங்க காணாம போய் இருக்காங்க. கேஸ் சப் வியுல நம்ம டிடெக்டிவ் ஏஜன்சிக்கு தான் வந்து இருக்கு"
"ஸோ.. நான் என்ன பண்றது?''
"நீதான் தான் பண்ணவேணும்.. ஏஜன்சியோட முதல் ரெபரே நீ தான்"
"தா.. நானா.. நன்றி கேட்ட ஜென்மம் டா.. ஓன் மொதலாளியும்.. உன் சீப்.. அவ பேரு என்ன?.. நையிரா.. வாயில வருது நல்ல மயி.. வேணாம்."
"லந்து பண்ணாம வா கணேசு. முதலாளி. ச்சே உன் கூட சேர்ந்து முதலாளின்னு சொல்றன் பாரு. நம்ம எம்.டீ தான் கூப்பிட்டாரு"
கணேசன் இதை எல்லாம் கணக்கு எடுக்காமல் சுவரில் ஒட்டப்பட்டு இருந்த லிங்கா போஸ்டரை வெறித்து பார்த்து கொண்டு புகை பரப்பிக் கொண்டு இருந்தான்.
தொடர்ந்த கிஷோர் "உனக்கு மனசுல பெரிய சுஜாதா புக்ல வர்ற கணேஷ்னு நினைப்பா. லந்து பண்ணாம வா"
"ஐ புக்கு.. இலக்கியம் டா.. நாவல் டா" கை தட்டி சிரிக்க தொடங்கினான்.
"உனக்கு சினிமா தானே பெருசு. இலக்கியம் எல்லாம் எங்க புரிய போகுது!"
"ஐ.. என்னடா பெருசா இலக்கியம் பேச வந்துட்ட.." சற்று எழுந்து உட்கார்ந்து கொண்டே தொடர்ந்தான் "இப்போ நான் சிகரெட்டு பிடிக்குரேன்னு வைச்சுக்கோ.. சினிமான்னா என்ன செய்வாங்க.. கீழ.. அழகா.. ஒரு பாட்டில் போட்டு.. ஒரு சிகரெட் போட்டு.. அதை செவப்பு கோடால அழிச்சு.. சிகெரட் இஞ்சூரியஸ் யுவர் ஹெல்த்ன்னு போடுவாங்க இல்லையா??.. ஆனா உங்க எலக்கியத்துல ஸ்டாம்ப் சைசுக்காவது போடுறீங்களா?? ப்ளடி பாஸ்கர்.."
"உன்கூட பேச முடியாது. பேசினாலும் உனக்கு புரியாது."
"அப்போ ஸ்டேடஸ் போடு.. அஹ் ஹா ஹா"
"வேற பேச்சு இல்லை. நாளைக்கு ஆபிஸ் வர்ற"
காலை நேரம். ஈ.சீ.ஆர். ரோட் இன்னும் அழகாக காட்சி அளித்தது. புதிதாக கட்டப்பட்ட ஆபிஸ். துடுக்குதனமான கணேசனின் அறிவுக்கு ஈடு கொடுக்க முடிந்திராத கட்டிடம். மேலதிகாரிகளின் ஈகோவினால் கொஞ்ச மாதங்களுக்கு ஆபிஸ்க்கு கணேசனால் ராஜினாமா கொடுக்க பட்டு இருந்தது.
சரியாக நாற்பத்து எட்டு நாட்களுக்கு பின் என்டர். கணேசனின் டேபிள் நிர்வாணமாய் கிடந்தது. வூடன் டேபிளில் கருப்பு கலர் லேப்டாப் பேக்கை வைக்க பாக்சர் ஜட்டி போட்டு விட்டது போல் காட்சி கொடுத்தது.
"குட் மார்னிங்"
"கிரேட் மார்னிங் கிஷோகர்"
"சரக்கு சமிபாடு ஆச்சா"
"ஆச்சு ஆச்சு.. சரக்குன்னு உனக்கு எப்படி தெரியும்.."
கோபமாய் "சரி ஒண்ணுமில்லை.. இந்த பைல்சை பாரு.. நான் நையிரா மேடம் கிட்ட போயிட்டு வாரேன்"
"வரும் போது அவ கிட்ட என்ன கலர் ப்ரான்னு கேட்டு வா"
"கணேசா.. வேணாம் கொஞ்ச நாளைக்கு"
"ஏது ப்ராவா? அதை போய் அவகிட்ட சொல்லு.. நான் போடுறது இல்லை" மந்தகாசமாய் புன்னகைத்து விட்டு வெளியேறினான் கிஷோகர்.
"குட் மோர்னிங் நையிரா மேம்"
"ஹாய் கிஷோகர்.. குட் மோர்னிங்"
"ப்ரீயா??"
"யா யா சொல்லு"
"கணேசன் மறுபடி வந்துட்டாரு.. வர வைச்சாச்சு.."
"யாரு.. கித்தாருக்குள் பாம் கடத்துன கேஸை கத்தாருக்குள் பாம் கடத்தின கேஸ்னு மாத்தின அந்த லூசா??" சிரிக்கும் போது பல்வரிசை அழகாய் இருந்தது.
"உங்க கலவரத்துள்ள என்னைய நுழைக்க வேண்டாம். அந்த பைலை கொடுங்க"
"பொண்ணுங்க பைல் தானே.. பெர்வெர்ட்.. அவனுக்கு இது மாதிரி கேஸ்னா இனிக்குமே"
"ஐயோ சீத்தா ராமா.. அந்த பைலை கொடுங்க மேம்"
-----------------------
''கணேஷ்.. இதோ.. வாட்ச் திஸ் பைல்ஸ்.. டுவல்வ் தேர்"
"இதுவரைக்கும் எதுவரைக்கும் அனலைஸ் பண்ணி இருக்கீங்க"
''மொத்தம் பன்னிரண்டு பொண்ணுங்க கடத்த பட்டு இருக்காங்க"
"..ம்..."
"மாலதி, ராதிகா, சந்தியா, வைசாலி, லக்ஸ்மி, ஸ்டெல்லா, மருவா, வித்யா, விருபமா,ஃபாஸியா, கஜேந்தி அண்ட் மாலினி"
''மொத்தம் பன்னிரண்டு பொண்ணுங்க..பன்னிரண்டு பொண்ணுங்களுக்கும் ஏதும் ஒற்றுமை???.."
"இதுவரை விசாரிச்சதுல பதினோரு பொண்ணுங்களுக்கு இருபத்து நாலு வயசு ஆகுது.. மத்த ஒருத்தி வயசு மட்டும் இருபத்து ஒன்பது"
"இருபத்து ஒன்பது வயசு பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடிச்சா?"
"ஆ... ஆமா.."
"ஹஸ்பன்ட்?"
"இருக்காரு.. ஸ்கூல் டீச்சர்"
"குழந்தைங்க?"
"கிடையாது"
"அந்த பொண்ணு பேரு"
"கஜேந்தி.. '
''ஓகே.. இந்த பொண்ணை கொஞ்சம் லூஸ்ல விடுவோம்..மற்ற பொண்ணுங்க பதினோரு பேருக்கும் வருவோம்''
"ஒரே நாள்ல கடத்தப்பட்டாங்களா..?"
"இல்லை.. ஆகஸ்ட் இருபத்து நாலு தொடக்கம் செப்டம்பர் பத்து வரைக்கும் வேற வேற நாட்கள்"
"அவங்க பிறந்த நாள் அதுல ஏதாவது ஒற்றுமை??"
"அதுல கூட ஒற்றுமை இல்லை.. ஆனால் அதுல பத்து பேரோட பிறந்த நாள் அவங்க கடத்த பட்டது போலவே ஆகஸ்ட் இருபத்து நாலு தொடக்கம் செப்டம்பர் பத்து வரைக்கும் வேற வேற நாட்கள்ல வருது"
"ஓ கிரேட்.. இது கூட ஒற்றுமை தான்.. சந்தேகப்படாமல் நம்ம எண்ணிகையை பத்துக்கு குறைச்சுடு.. அவ ஏதும் கள்ளமா, காதலா இருக்கும்.. லாம்.. "
"பிறந்த நாள் இல்லாத பொண்ணு பேரு வைசாலி.."
"கொடு பார்ப்போம்.."
வேகமா அறைக் கதவு திறந்தது. "கிஷோகர் சம் ஷாக்கிங்க் நியுஸ்" நையிரா படபடத்து நின்றாள்.
"வாட்"
"கடத்தப்பட்ட பொண்ணுங்கள்ள பத்து பொண்ணுங்க.. அநாதைங்க.. அவங்க பேரன்ட்ஸ் எல்லாருமே அவங்களை தத்து எடுத்து வளரத்ததா ரிப்போர்ட் பண்ணி இருக்காங்க"
"யாரு அந்த வைசாலி, கஜேந்தி தவிர்த்த பத்து பேர் தானே" கணேஷன் குறுக்கிட்டான்.
"ஆமா"
"இதையே இப்ப தான் கண்டுபிடிக்குற நீ.. இதுலாம் ஒரு மேட்டர்னு சொல்ல வந்துட்ட.."
கோபமாய் கணேசனின் டேபிளில் கையில் வைத்து இருந்த ஆறு புகைப்படங்களையும் தூக்கி எறிந்தாள்.
கணேசனின் அலுவலக மேசையில் மறுபடியும் நிர்வாணம் பரந்தது.
"வாட் த ஹெல் இஸ் திஸ்" திடுக்கிட்டு எழும்பினான் கணேசன்.
---------------------------------------------------------------------------------
இன்று
இன்று
திடீரென்று காட்டில் கொடும் சத்தத்துடன் மிகப்பெரிய சலசலப்பு கேட்டது... காட்டையே தூக்கிக் கொண்டு போவது போல் ஒரு மாபெரும் சலசலப்பு... காட்டுக் குரங்குகள் க்க்கீக்கீறுக்க்கீரென்று அலறத்தொடங்க... திடிரென பெரும் வெடிப்பு ஒன்று அங்கே நிலத்தில் உருவாக தொடங்கியது.
வந்த பாதையே தெரியவில்லை. இது என்ன புது பாதை போல பெண்கள் ஒருவருக்கொருவர் பார்த்து கொண்டார்கள். ஆழத்துக்குள் போகின்ற பயத்தில் அவர்கள் முடிந்தவரை இருவர் மூவராக கைகளை கட்டி கொண்டார்கள்.
பெரும் வேகமாக அவர்கள் பயணம் இருந்தது. இயற்கையா செயற்கையா என்று அறியமுடியா விந்தை அவர்களை ஆட்கொண்டது. சில்வர் கலரில் மேல் இருந்து கீழே மணிக்கு தொண்ணூற்று ஆறு கிலோமீட்டர் வேகத்தில் பயணப்பட்டு கொண்டு வந்தார்கள். சுற்றிலும் பார்க்க சில்வர் நிறத்தில் இழுத்து விட்டாட் போல் பாதை இருந்தது.
இன்னுமொரு உலகத்துக்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள். இன்னொரு உலகமா? இல்லை அதே உலகம் தான். அதே கால நிலை தான். அதே காடு தான். அதே நிர்வாணம் தான். பின் ஏன் இந்த பயணம்?.
"வார்ம் ஹோல் போல இது ஏதோ பயண பாதையா இருக்கும்.. மே பீ சில்வர் ஹோல்" சந்தியா.
"என்ன சொல்லுற?" ஒன்பதில் ஒருத்தி.
"நீ கேள்வி பட்டதில்லை.. வார்ம் ஹோல்.. நம்ம அறிய முடியாத சிறிய துளை பாதை"
"ஒளர்றா..." வித்யா முந்தினாள்.
"நம்ம ஒரு பாதையில வந்தோம். ஆனால் அதே உலகத்துக்கு வந்து இருக்குறோம். அப்புறம் இது அது மாதிரி இல்லைனா எப்படி?"
"இருக்கலாம். ஆனா இப்போ இதை பற்றி பேசுறதால் என்ன பிரயோஜனம்?"
வாதம் பத்து முனைகளிலும் கடந்து நின்றது.
பெண்கள் கிடைத்த இடங்களில் லாவகமாக அமர்ந்து கொண்டனர்.
"ஃபுட் இருக்குமா, டிரஸ் கிடைக்குமா, எதுக்கு வந்தோம்? ஏன் வந்தோம்? எப்படி வந்தோம்?" மருவா அழ துவங்கினாள்..
"அழாத டி.. நம்ம எப்படியாச்சும் தப்பிக்க வழி கிடைக்கும்.. நம்பிக்கை இழக்காத." விருபமா அவளை ஆறுதல் படுத்தினாள்..
விருபமா எழுந்தாள்..
"கேர்ல்ஸ்" சத்தமாக பேச தொடங்கினாள்.
"எந்த நிலையிலையும் நீங்க யாருமே நம்பிக்கை இழக்காதீங்க.. நம்ம வைச்சு விளையாடனும்னு நினைக்குறவங்களுக்கு நம்ம யாருன்னு காட்டுவோம்.. இங்கே இருக்குற ஒவ்வொருவருக்கும் மிச்சம் ஒன்பது பேரும் தான் பாதுகாப்பு.. அப்படி நினைச்சு நடப்போம்.. நீங்க இப்படியே சண்டை போட்டிங்கன்னா.. நம்மள கடத்துனவங்க கொல்றதுக்கு முன்னாடி நமக்குள்ள நாம அடிச்சிட்டு செத்து போய்டுவோம்.."
பேசிக்கொண்டு இருக்கும் போதே வானத்தில் பன்னிரண்டு ஹெலிகாப்டர்கள் வட்டமடிக்கும் சப்தம் கேட்டது. பெண்கள் இருந்த பகுதியில் கிட்டத்தட்ட இருபத்து நான்கு அடி உயரத்தில் ஏகப்பட்ட மரங்கள் சூழ்ந்து இருந்தன.
ஹெலிகாப்டர்கள்.. மனிதர்கள் என்னும் பொழுது தான் பெண்களுக்கு நிர்வாணம் ஞாபகம் வந்தது. முடிந்தவரை மரங்களுக்கு பின்னால் மறைந்து கொண்டார்கள்.
ஹெலிகாப்டர்கள் பறந்து பறந்து உயர்ந்து போய் மறைந்தது.
சட்டென்று ஒரு பெட்டி ஹெலிகாப்டரில் இருந்து கீழ் நோக்கி விழுந்தது.
விருபமா முந்தி போனாள்.
திறந்து பார்த்தால் ஒரு சின்ன பேப்பர் சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. விரித்தாள். சுற்றி ஒன்பது பேரும் சூழ்ந்துகொண்டார்கள்..
விருபமா வாசிக்கத் துவங்கினாள்
"டியர் பிட்சஸ்"
நான்கு பெண்கள் மார்பை மறைத்து அழ தொடங்கினார்கள். "சம் வன் வாட்சிங் அஸ்.. ஐயோ கடவுளே.. எங்கே சிக்கிட்டோம் !!"
"உங்க கண், காது, வாய், மார்பு... ஸ்ஸ்ஸ் ஸா எல்லாமே"
"மதர் பக்கர்" விருபமா நிறுத்தினாள்.
நான்கு வரிகளை கடந்து "மேலே உங்களை சுற்றி இருக்குற மரம் தான் உங்க முதல் பிலொட். பாருங்க.."
பத்து பெண்களும் சுற்றி பார்த்தார்கள். மரத்தின் உச்சியில் ஒரு பை போல தொங்கி கொண்டு இருந்தது. பன்னிரண்டு பைகள் வேறு வேறான பன்னிரண்டு மரங்களில் தொங்கிக் கொண்டு இருந்தது.
"என்ன பத்து பேருக்கு பன்னிரண்டு பை.. இது எல்லாம் கேமான்னு தானே நினைக்குறீங்க..?.. அதுல தான் ஒரு கேம் இருக்கு" நிறுத்தி கொண்டாள்
"நியுட் கேர்ல்ஸ்.. உங்கள்ல மருவா, ராதிகா நாளைக்கு தங்களோட இந்த மாச பீரியட்ஸ் கொண்டாட இருக்காங்க.. ட்ரெஸ் இல்லாம அதை கொண்டாடுனா எப்படி இருக்கும்.. நியுடா.. வித் பிளட்.. ஹா ஹா''
ஒவ்வொருவரும் மாறி மாறி பாவமாய் பார்த்தார்கள். ஏற்கனவே அழுது கொண்டு இருந்த மருவாவிற்கு செத்து விடலாம் போல இருந்தது.
"ஹே கேர்ல்ஸ் இருங்க.. ஒவ்வொரு பேக்லையும் ஒவ்வொரு விஸ்பர் இருக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க.. அண்ட் உங்க பிங்கர் பிரிண்ட் மூலம் தான் ஒவ்வொரு பேக் லாக் எடுக்க முடியும்.. பத்து பேரும் ஒன்னா பேக்ல பிங்கர் பிரிண்ட் பண்ணுனா தான் மரத்துல எல்லாரோட பேகும் லாக் அவுட்டாகி கைல கிடைக்கும்.. ஸோ நிச்சயம் எல்லாரும் மரத்து மேல ஏறியாகனும்.. எல்லாம் ஒரு மணி நேரத்துக்குள் நடந்து முடிய வேண்டும்" குறிப்பு முடிந்தது.
மறுபடியும் விருபமா சத்தமாக பேச தொடங்கினாள்.. "கேர்ல்ஸ்.. டோன்ட் பேனிக்.. வீ ஹேவ சான்ஸ்.. நமக்கு இப்போ வேற வழி இல்லை.. எது கிடைச்சாலும் சமமா பிரிச்சுக்குவோம்.. அது ஃபுட்னாலும் சரி.. ட்ரெஸ்னாலும் சரி.. சண்டை வேணாம்"
இவர்களை போலவே க்ருக்ஸ் கிரக மரங்களும் நிர்வாணமாகவே காட்சி அளித்தது.. இலைகள் கிடையாது.. நாம் பார்க்கும் மரங்களை போல இருந்தாலும் கிளைகளுக்கு பதில் தடிகள் போல ச்ழற்றி சுழற்றி மேலே வளர்ந்து இருந்தது.. ஏறுவது கடினமாக இருக்காது போல இருந்தது..கிட்டத்தட்ட எல்லா மரங்களுமே நாற்பது அடி உயரமாக இருந்தது.
வித்யா பாதி மரம் கடந்து இருந்தாள்..அவளுக்கு விருபமா சட்டென்று அதிகாரம் பண்ண துவங்கியது கோபத்தை கொடுத்து இருந்தது.
விருபமா உட்பட மிச்சம் ஒன்பது பேரும் ஏற துவங்கினார்கள்.. நீளமான தடிகளை கடக்கும் போது மருவா கூச்சதோடே ஏறி கடந்தாள். இத்தனை வருடம் மறைத்த அங்கங்கள் இப்படி மலிவாக காட்டபடுவதை அவளால் ஏற்று கொள்ள முடியவில்லை..
வித்யா உச்சியை தொட்டு இருந்தாள்.. சிறிய சிறிய நேர வித்தியாசங்களில் மிச்சம் பேரும் உயரத்தை தொட்டார்கள்..
பிங்கர் பிரிண்ட் பண்ணுவதற்கு ஒரு லாக் ஒன்று, மரத்துக்கும் கடினமான மரத்தின் கிளைக்கும் நடுவே அமைந்து இருந்தது..
"கேர்ல்ஸ்.. வன்.. டூ.. த்ரீ.." வித்யா சத்தம் போட்டாள். அனைவரும் ஒன்றாக தங்கள் கைவிரல்களை லாக்கில் பதித்தார்கள்.
பேக் லாக் திறந்து கொண்டது.. உள்ளே ஃபுட், ட்ரெஸ்.. தற்காலிக சந்தோசம் தான் என்றாலும் கண் கலங்கி கொண்டாடினார்கள்.. கைகளில் இருந்த பைகளை கீழே தூக்கி போட்டார்கள். கீழே இறங்க ஆயத்தமானார்கள்.
சட்டென்று ஒரு அதிர்வு நிலத்தில் இருந்து மரங்களுக்குள் கடந்து போனது.. மரங்கள் சகட்டு மேனிக்கு குலுங்க தொடங்கினது..இப்போது எதிர்பாராத அதிர்ச்சி ஒன்று அவர்களுக்கு காத்து இருந்தது.
பைகள் இருந்ததான பன்னிரண்டு மரங்களில் ஆறு மரங்கள் சட்டென்று தங்கள் தடிகளை உள்வாங்கி கொண்டது. கேட்டதில் நல்லதாக பெண்கள் நிற்காத இரண்டு மரங்களையும் சேர்த்தே அப்படி நடந்தது.
இதில் சிக்கி கொண்டவர்கள்.. விருபமா, மருவா, மாலினி, ஸ்டெல்லா.. நான்கு பெண்களும் செய்வது அறியாது முழித்தனர்.
விருபமா "வித்யா, சந்தியா மொதல்ல ஆறு பேரும் இறங்கிடுங்க.. என்ன நடக்கும்னு தெரியாது மரத்துல தடி இருக்கும் போதே இறங்கிடுங்க''
ஆறு பெண்களும் வேகமாக இறங்க துவங்கினார்கள். சந்தியாவின் வலது மார்பின் கீழே தடி ஒரு சிராய்ப்பை போட்டது.
விருபமா "யாராச்சும் ஸ்கவுட் கேர்ல்ஸ் இருக்கீங்களா" என கேட்டாள்.
வித்யாவும், ராதிகாவும் கைகளை உயர்த்தினார்கள்.
"நாங்க நாலு பேரும் ஒருத்தர் ஒருத்தரா குதிக்குறோம். உங்க கைகள ஜாயின் பண்ணி ஒரு வலை போல எங்களை பிடிச்சு கோங்க" என்றாள்..
வித்யா இந்த இடத்தில ஈகோ பார்ப்பது அநியாயம் என்று எண்ணினாள்.. சட்டென்று தனக்கு தெரிந்த முறையில் பெண்களின் கைகளை பரப்பி ஒரு வலை உண்டாக்கினாள்..
"பாயும் போது கொஞ்சம் இறக்கம் காட்டி உயர்த்துங்க.. அப்போ தான் விசை தள்ளாது" வித்யா..
"மாலினி ஜம்ப் பர்ஸ்ட்"
மாலினி குதிக்க ஆயத்தமானாள். "நேராவே பாய்ரேன்.. ஓகே?"
"ஓகே யூ ஜம்ப் பாஸ்ட்"
குதிக்க பாய்ந்தாள்..
சட்டென்று மரத்தின் நடுப்பகுதியில் தடி இருந்ததான இடத்தில் ஒரு வாள் நீண்டது..பெண் குறியை கிழித்து அப்படியே வகிடெடுத்த தலை வரை அவளை அப்படியே இரண்டு துண்டாக வெட்டி போட்டது..
ஆறு பெண்களின் கை வலையிலும் மாலினி துண்டாக வந்து விழுந்தாள்..
(தொடரும்....)
உரலிகள் :-
No comments :
Post a Comment